/* */

இமயமலை போன ரஜினி.. இதான் காரணமா?

ரஜினியின் இமயமலை பயணத்துக்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கிறதாம்!

HIGHLIGHTS

இமயமலை போன ரஜினி.. இதான் காரணமா?
X

வழக்கமா எந்த ஒரு செயலும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இமயமலைக்கு போயிட்டு வர்ற ரஜினி, இப்ப பட ரிலீஸ் ஆகமுன்னாடியே புறப்பட்டிருக்கார்னா விசயம் புரியலையா.. படம் ஊத்திக்கிச்சுன்னு திடீரென்று கிளம்பி வருகிறது ஒரு செய்தி. இணைய தளங்களைச் சுற்றி வரும் இந்த செய்தியில் ரஜினி இந்த படத்தைப் பார்த்த பிறகுதான் இமயமலைக்கு புறப்பட்டுச் செல்கிறார் என்பது போல கூறப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி நாளைக்கு ஆகஸ்ட் 10, 2023 ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் ஜெயிலர். ரஜினியுடன் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, ரித்து, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரோப், விநாயகன், சுனில் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் ஹூக்கும் பாடலையும் தாண்டி தமன்னா ஆடிய ஆட்டத்தால் காவாலா பாட்டு பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது. இந்த பாட்டால் உலக லெவலில் இந்த படத்துக்கு புரமோசன் கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் ரஜினிகாந்த் நேற்று படம் பார்த்திருக்கிறார். படத்தை முழுமையாக பார்த்த அவர் பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே எழுந்து கிளம்பிவிட்டார் எனவும் வீட்டுக்கு சென்று உடனடியாக இமயமலைக்கு புறப்படும் வேலையை ஆரம்பித்துவிட்டார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவே கவலையில் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில், படம் என்னதான் நல்லா இல்லைனாலும் படத்த ஓட்டிரலாம் என்று சன்பிக்சர்ஸ் முடிவு பண்ணி இருக்கிறார்களாம். இந்த படம்தான் தன்னுடைய கெரியர காப்பாத்தும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு இது பெரிய இடியாக வந்து விழுந்திருக்கிறது என்று அந்த செய்தி கூறுகிறது.

ரஜினிகாந்த் எதிர்பார்த்தது விக்ரம் மாதிரி ஒரு பெரிய ஹிட். ஆனால் அதுக்கான படமாக இது இல்லையே என்று கவலையில் இருப்பதாகவும், இதனால்தான் உடனடியாக இமயமலைக்கு செல்ல இருப்பதாகவும் கூறுகின்றனர். இருந்தாலும் நாளைக்கு படம் எப்படி வரப்போகுது மக்கள் அத எப்படி ஏத்துக்கப்போறாங்க என்பதை பொறுத்துதான் ஜெயிலர் படத்துக்கான ரிசல்ட் தெரியவரும்.

Updated On: 10 Aug 2023 12:12 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்