/* */

உதட்டு முத்தம் கொடுத்ததற்காக, வேதனைப்பட்ட 'வாரிசு' நடிகை

Rashmika Mandanna News - 'டியர் காம்ரேட்' படத்தில், விஜய் தேவரகொண்டாவுக்கு, 'லிப்லாக் கிஸ்' கொடுத்ததற்காக மிகவும் வேதனைப்பட்டேன் என்கிறார், 'வாரிசு' படநாயகி ராஷ்மிகா மந்தனா.

HIGHLIGHTS

உதட்டு முத்தம் கொடுத்ததற்காக, வேதனைப்பட்ட வாரிசு நடிகை
X

rashmika mandanna news - நடிகை ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna News - தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா மீண்டும், நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேருகிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து, 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்த பின், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் வேகமாக உயரத் துவங்கியது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கு 'லிப்லாக் கிஸ்' கொடுத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.


கன்னடத்தில் 'கிரிக் பார்ட்டி' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதன் பின் தெலுங்கிலும் நடிக்கத் துவங்கினார். 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, தனது 'க்யூட்' ஆன 'எக்ஸ்பிரஷ்ன்'களால், நடிப்பில் வித்தியாசம் காட்டினார். முக்கியமாக, 'க்ளைமேக்ஸ்' காட்சியில் விஜய் தேவரகொண்டாவுக்கு 'லிப்லாக் கிஸ்' கொடுத்து, பயங்கரமாக ட்ரெண்டானார். இந்த, 'லிப் லாக் கிஸ்' காட்சி, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவும் வைரலானது. 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து, 'டியர் காம்ரேட்' படத்திலும், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார்.


ராஷ்மிகா மந்தனா கார்த்தியுடன் 'சுல்தான்', அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா' ஆகிய படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட், அநியாயத்துக்கு தாறுமாறாக உயர்ந்தது. இதனால், இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'வாரிசு' படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதேபோல் இந்தியிலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' என்ற படத்திலும் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் நேற்று (அக் 7) வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கார்த்தியுடன் 'ஜப்பான்' படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது 'முன்னாள் காதலர்களை இப்போதும் நல்ல நண்பர்களாக பார்க்கிறேன். அவர்களின் மனைவிகளை சந்திக்கவும், எந்த தயக்கமும் இல்லை,' எனக் கூறியிருந்தார். 'அதேபோல், விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என பேசுவதை மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறேன்,' எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இப்போது 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' படங்களில் விஜய் தேவரகொண்டாவுக்கு கொடுத்த 'லிப்லாக் கிஸ்' பற்றி மனம் திறந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.


'குட்பை' படத்தின் 'புரமோஷன்' நிகழ்ச்சியில் தனது வாழ்நாளில் நடந்த சோகமான நிகழ்வு பற்றி ராஷ்மிகா பேசியிருந்தார். அதில், 'டியர் காம்ரேட்' படத்தில் கதைக்கு தேவை என்பதால், விஜய் தேவரகொண்டாவுக்கு 'லிப்லாக் கிஸ்' கொடுத்து நடித்தேன். ஆனால், படம் வெளியான பிறகு, பலர் இந்த முத்தக்காட்சியை காரணம் காட்டி, என்னை இழிவாகப் பேசினார்கள். தரக்குறைவாக விமர்சித்தார்கள். அதையெல்லாம் படித்துவிட்டு மிகவும் 'அப்செட்'டாகி படுக்கையில் அழுதபடி கிடப்பேன். அப்போதெல்லாம் விமர்சனங்களை மனதில் எடுத்துக்கொள்வேன். இப்போது எனக்குள் தைரியம் வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Oct 2022 7:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!