/* */

'ராஜமாதா' ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள்

நடிகை ரம்யா கிருஷ்ணனின் 51ஆவது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

HIGHLIGHTS

ராஜமாதா ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள்
X

'நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணன்

மிகச் சிறிய வயதிலேயே நடிப்பு துறைக்குள் பலர் நுழைந்தாலும், அவர்களில் எத்தனை பேர் வெற்றியடைகிறார்கள் என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஆனால் 14 வயதில் திரைத்துறைக்குள் நுழைந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

ஆரம்பத்தில், சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த ரம்யா கிருஷ்ணன், 'வெள்ளை மனசு' படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற அடுத்ததாக ரஜினிகாந்தின் 'படிக்காதவன்', கமல் ஹாசனுடன் 'பேர் சொல்லும் பிள்ளை' ஆகிய படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

இதனையடுத்து அவர், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான, 'படையப்பா' படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தது அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பஞ்சதந்திரம் படத்தில் மேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது வெப் சீரிஸ், நிகழ்ச்சியில் நடுவர் என கலக்கி வருகிறார்.

ரம்யா கிருஷ்ணன் இன்று (செப்.15) தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்