/* */

Raavana kottam ott-'ராவண கோட்டம்' OTT -ல் எப்போ ரிலீஸ் ஆனது தெரியுமா?

சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் OTT -ல் ரிலீசாகி ஓரளவு வசூல் செய்தது.

HIGHLIGHTS

Raavana kottam ott-ராவண கோட்டம் OTT -ல் எப்போ  ரிலீஸ் ஆனது தெரியுமா?
X

Raavana kottam ott-ராவண கோட்டம் திரைப்படத்தில் ஒரு காட்சி.(கோப்பு படம்)

Raavana kottam ott

இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் சமூக-அரசியல் கதையாக உருவாக்கப்பட்ட திரைப்படம், ராவண கோட்டம். இந்த திரைப்படம் OTT தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

நடிப்பு

ராவணன் கோட்டம் திரைப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகை ஆனந்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ராவண கோட்டம் மே 12 அன்று திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களுடன் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் , ​​ராவண கோட்டம் ஜூன் 16ம் தேதி அன்று அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Raavana kottam ott

அந்த காலகட்டத்தில் இந்த OTT வெளியீடு அறிவிப்பில் மகிழ்ச்சியடைந்த சாந்தனு தனது படத்தின் OTT அறிமுக செய்தியை ட்வீட் செய்தார். “ராவண கோட்டம் டிஜிட்டல் வழியாக ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 16 முதல் அமேசான் பிரைமில்,” என்று சாந்தனு வெளியிட்ட ட்வீட்டுடன், ராவண கோட்டத்தின் போஸ்டரையும் சேர்த்து வெளியிட்டார்.


கதை

ராவண கோட்டம், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளாக கதை பின்னப்பட்டுள்ளது. சில அடக்குமுறை அதிகாரிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் பிரச்னைகளை எதிர்கொள்கிறது.

இது பல குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒரு துடுக்குத்தனமான கிராமவாசியைப் பற்றியது. கிராம மக்கள் எதிர்கொள்ளும் இந்த தொடர்ச்சியான பிரச்னைகளை அவர் தீர்க்க வேண்டும். அதற்கு சக்திவாய்ந்த அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் ஒரு இளைஞனாக தோன்றுகிறார் சாந்தனு.

Raavana kottam ott

கண்ணன் ரவி தயாரித்து வெளியிட்ட இந்த திரைப்படத்தில் சாந்தனு மற்றும் ஆனந்தி தவிர, சஞ்சய் சரவணன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் இளவரசு ஆகியோருடன் பிரபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் விமர்சனம்

பெரும்பாலும் வறண்ட மாவட்டமாக பார்க்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் நீர் பற்றாக்குறை, கருவேல மரத்தை மையமாக வைத்து அரசியல் மற்றும் சாதி பிரச்னையைப் பின்னி உருவாகியுள்ளது இந்த ராவண கோட்டம். கேட்பதற்கு பழைய கதையாக இருந்தாலும் புதிய கதைக்களம் மூலம் இப்பிரச்சனைகளை கூற வந்திருக்கும் ராவண கோட்டம் ரசிகர்களை ஈர்த்ததா என்பதுதான் இங்கு கேட்கப்படவேண்டிய வினா.

ராமநாதபுரத்தில் உள்ள ஏனாதி என்ற கிராமத்தின் பெரிய தலைக்கட்டாக இருக்கும் மேலத் தெருவைச் சேர்ந்த பிரபு மற்றும் கீழத் தெருவைச் சேர்ந்த இளவரசு ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து கொண்டு சாதிப்பிரிவினை இன்றி தங்களது ஊரை ஒற்றுமையாக வாழப் பழக்கி வருகின்றனர்.


இதைப் பிடிக்காத அரசியல்வாதி அருள்தாஸ், மந்திரி பி.எல்.தேனப்பனோடு சேர்ந்துகொண்டு கீழத் தெருவைச் சேர்ந்தவர்களை தூண்டிவிட்டு இரு சமூகத்திற்குள் பிரச்னையை உருவாக்கி பிரிவினையை உண்டாக்க முயற்சி செய்கின்றனர். அதற்கு பகடைக்காயாய் நாயகி ஆனந்தியின் காதலை பயன்படுத்தி பிரிவினையை உண்டாக்கி ஊருக்குள் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மேலத் தெருவைச் சேர்ந்த சாந்தனுவும் கீழத் தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணனும் பிரிய நேர்கிறது. இதைப் பயன்படுத்தி பிரிவினையை உண்டாக்கும் அரசியல்வாதிகளை எப்படி சாந்தனு தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடி வெற்றிபெறுகிறார் என்பதுதான் மொத்த திரைக்கதை.


அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இரு நண்பர்களுக்குள்ளே நடக்கும் பிரிவினையை பயன்படுத்தி அதனுள் காதலையும் புகுத்தி, கூடவே தற்போதைய சூழலில் நடக்கும் நவீன பிரச்னைகளையும் கூறி ஒரு உணர்ச்சிமிக்க திரைப்படமாக இதை உருவாக்கி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.

சாதிப் பிரச்னை, மண் சார்ந்த கருவேல பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறை என பொது பிரச்னைகளை பெரிதாக காட்டும்படியாக ஆரம்பித்த திரைப்படம் போகப்போக முக்கோண காதலுக்குள் நடக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் கதையாக திசைதிரும்புகிறது. இதனால் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.

நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பழைய திரைக்கதை உணர்வு நமக்குள் தானே ஏற்பட்டுவிடுகிறது. இதுவே படத்தின் விறுவிறுப்புக்கு தடையாக இருந்தது. இருந்தும் பிரபு மற்றும் சாந்தனுவின் துடிப்பான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது என்பதை மறுக்கமுடியாது. அவர்கள் இருவரின் நடிப்பே கதையை கரை சேர்க்க முயற்சி செய்து இருப்பது போலத்தோன்றுகிறது.


திரைக்கதை சுவாரசியத்தை காட்டிலும் அந்த மண் சார்ந்த பாரம்பரிய காட்சிகளும், அந்த ஊருக்குள் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களும் படத்தில் பிரமாதமாக எடுக்கப்பட்டு அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. முதல் பாதியில் வேகமாக நகர்ந்த கதை இரண்டாம் பாதியில் மெதுவாக நகர்ந்து கதை முடிகிறது.

நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் முழு மனதுடன் உபயோகப்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தானும் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்புத் தேவையோ அதை மிகச் சிறப்பாக செய்து தேர்ந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்து இருக்கிறார்.


இப்படம் மூலம் அவருக்கு ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது. நாயகி கயல் ஆனந்தி வழக்கமான நாயகியாக வந்து சென்று இருக்கிறார். இவருக்கும் சாந்தனுவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

சாந்தனுவின் நண்பர் சஞ்சய் சரவணன் மிக எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பில் தான் ஒரு அறிமுக நடிகர் என்று நம்பமுடியாத அளவில் தனது நடிப்பில் அசத்தி இருக்கிறார். இவர்களுடன் ஒரு கை இல்லாமல் நடித்திருக்கும் நடிகர் மிகச் சிறப்பாக நடித்த கவனம் பெற்று இருக்கிறார்.


இவரின் எதார்த்தமான நடிப்பும் வசன உச்சரிப்பும் திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது. மூத்த நடிகர்கள் பிரபு மற்றும் இளவரசு நடிப்பு வழக்கம் போல் சிறப்பாக அமைந்திருக்கிறது. இவர்களது அனுபவ நடிப்பு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகளாக வரும் பி.எல்.தேனப்பன், அருள்தாஸ் ஆகியோர் சூழ்ச்சி செய்யும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 'அத்தனை பேர் மத்தியில' பாடல் ஹிட் ரகம். அதேபோல் பின்னணி இசையும் சிறப்பாக கொடுத்து இப்படத்தின் இரண்டாவது நாயகனாக மாறி இருக்கிறார். இவரது இசையே இப்படத்தின் பிரதான பலமாக மாறி இருக்கிறது.


வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் ராமநாதபுரம் அதை சுற்றியுள்ள கிராமத்தை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்திருக்கிறது. லாரன்ஸ் கிஷோரின் கத்திரிகள் சிறப்பாக படத்தை வெட்டி உணர்ச்சிமிக்க காட்சிகளை மிக அழகாக வெளிப்படுத்த உதவிஇருக்கிறது.

இந்த திரைப்படம் பல நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் கூட கதையில் அழுத்தம் இல்லாதது படத்தின் தோல்விக்கு காரணமாகியது.

சொல்ல வந்த மெசேஜ் அழுத்தமாக கூறப்படவில்லை. காதல் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியதை கொஞ்சம் தவிர்த்துவிட்டு சமூக அரசியலில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் பேசப்படும் படமாக ராவண கோட்டம் மாறி இருக்கும்.

Updated On: 22 Sep 2023 7:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு