/* */

அமரர் கல்கிக்கு மரியாதை செலுத்தாத மணிரத்னத்துக்கு தயாரிப்பாளர்கண்டனம்

மணிரத்னத்துக்கு படதயாரிப்பாளர் கேயார் கண்டனம் தெவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS


பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்தை மெட்ராசு டாக்கீசு மற்றும் லைக்கா ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டது. இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து ரத்னம் இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த உடம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிகுவித்து வருகிறது. இந்த படம் வெளியான சினிமா தியேட்டர்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகின்றன.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மணிரத்னத்துக்கு தமிழ் சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கேயார் கண்டனம் தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொன்னியின் செல்வன் படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? என்றும் கேயார் கேட்டுள்ளார்.

இது பற்றி கேயார் கூறியதாவது:- பொன்னியின்செல்வன் படத்தின வெற்றிக்கு 50 சதவீத காரணம் அமரர் கல்கி தான். இந்த படத்தின் வெற்றி கல்கியை தான் சாரும் . 20 சதவீதம் ரஜினிகாந்த்-கமல்ஹாசனை சென்றடையும். ஏனெனில் பொன்னியின் செல்வன் ஆடியோ-டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு இருவரும் வந்து இந்த படத்தை பற்றி பேசினார்கள். இது ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. அவர்களின் பேச்சு படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனுடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட செய்திகள் பட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது . 10 சதவீதம் வெற்றி தொடர்விடுமுறை நாட்கள் தந்தவை. மீதமுள்ள 20 சதவீதம் வெற்றி தான் டைரக்டர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினரை சேரும்.

ராமாயணம் இந்துகளுக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ, அதுபோல் இனி தமிழர்களுக்கு பொன்னியின் செல்வன் இருக்க போகிறது. இதற்கு முழு காரணம் கல்கியின் எழுத்துக்கள் தான். இவ்வளவு காலம் எப்படி இந்த புத்தகத்தை படிக்காமல் விட்டுவிட்டேரம் என்று அனைவருமே தற்போது நினைக்கிறார்கள். எனவே இந்த வெற்றியின் பெரும்பங்கு கல்கிக்கு தான்.இந்த படத்தை 3 பாகமாக உருவாக்கி இருக்கலாம். அந்த அளவுக்கு அத்தனை கதாபாத்திரங்களும் முக்கியமானவை. இப்போது 2 பாகங்கள் மட்டுமே என்பதால் கதாபாத்திரங்கள் சற்று தொய்வும், சந்தேகமும் ஏற்படுகிறது. அதனால் கதாபாத்திரங்களில் சில இடங்களில் திருப்தி இல்லை.

இந்த படத்தில் அனைத்து சுமைகளையும் டைரக்டர் மணிரத்னமே தாங்கிக்கொண்டு விட்டார். ஆனாலும் மணிரத்னம் மேல் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கல்கியின் ஒரு மாபெரும் காவியத்தை அவர் படமாக்கி இருக்கிறார். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் கல்கியின் படத்துக்கு மரியாதை செலுத்தப்படவில்லை. படத்தின் முதல் காட்சியில் கூட கல்கி படத்தை காட்டவில்லை. எனவே 2-ம் பாகத்திலாவது இதனை செய்யவேண்டும். இந்த படத்துக்கு கதாநாயகனே கல்கி தான். அவருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு சன்மானம் வழங்கி கவுரவித்திருக்க வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது. இதை செய்தால் தான் நல்லது.கல்கிஇவ்வாறு கேயார் தெரிவித்துள்ளார்.

அவருடைய கருத்துக்கு பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அவருடைய கருத்தை இயக்குனர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் எப்படி? எடுத்து கொள்ளப்போகிறார்கள் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Updated On: 9 Oct 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...