/* */

பிரின்ஸ் படம் ஓடாததற்கு இது தான் காரணமாம்: சொல்கிறார் தயாரிப்பாளர்

Producer Rajan Open Talk About Prince Movie Flop -சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் படம் ஓடாததற்கு இதான் காரணம் என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார் தயாரிப்பாளர் ராஜன்

HIGHLIGHTS

பிரின்ஸ் படம் ஓடாததற்கு இது தான் காரணமாம்: சொல்கிறார் தயாரிப்பாளர்
X

பிரின்ஸ் படம் தோல்வி குறித்து தயாரிப்பாளர் ராஜன் 

Producer Rajan Open Talk About Prince Movie Flop -தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.


தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ப்ரின்ஸ். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி,ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வழங்கிய சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் திணிக்கப்பட்ட காமெடி காட்சிகளாலும், சொதப்பலான திரைக்கதையாலும் பிரின்ஸ் படம் ரசிகர்களை கவரவில்லை. அதனால் பாக்ஸ் ஆபிஸில் வசூலும் குறைந்தது.

இந்நிலையில் பிரின்ஸ் படம் ஓடாததற்கு காரணம் இதுதான் என்று தயாரிப்பாளர் கே ராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் ஹீரோக்கள் என்று சொல்கிறோம். தோல்வி என்றால் மட்டும் இயக்குனர் தான் காரணம் என்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர்கள் தான். தோல்வி அடைந்தாலும் அந்த இயக்குனர்கள் தான் காரணம். ஆனால், படத்திற்கு படம் நடிகர்களுடைய சம்பளம் ஏறிக்கொண்டே செல்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் நல்ல வெற்றியை பெற்றது. அதேபோல் டாக்டர் படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. ஆனால், பிரின்ஸ் படம் சரியாக ஓடவே இல்லை. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பு குறைந்து விட்டதா? இல்லை

இந்த படத்தின் இயக்குனர் கதையில் ஏதோ தவறு செய்து விட்டார். அதுதான் உண்மையான காரணம். இயக்குனர், தயாரிப்பாளர் தான் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம். அது மட்டுமல்லாமல் கதாசிரியரும் காரணம். கருவில்இருந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எவ்வளவு சிரமமோ, அதைவிட சிரமம் ஒரு கதையை உருவாக்குவது. அதனால் இவர்கள் தான் படத்தின் வெற்றிக்கு காரணம். அதற்குப் பிறகுதான் நடிகர்கள், டெக்னீசியன் என்று கூறினார்.

படத்தின் கதை:

சத்யராஜ் தன் குடும்பத்துடன் பாண்டிசேரியில் குடும்பத்துடன் வசித்து வரும் சத்யராஜ், ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார். சத்யராஜின் மகனான சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.

அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் கதாநாயகி மரியாவை (ஜெசிகா) சிவகார்த்திகேயன் காதலிக்கிறார். தன் தந்தை சத்யராஜிடம் காதல் குறித்து கூறுகிறார். ஆனால், தன்னுடைய மகன் ஆங்கிலேய பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்த சத்யராஜ் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் ஜெசிகாவின் தந்தையும் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தன்னுடைய காதலியை சிவகார்த்திகேயன் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...