/* */

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படப்பிடிப்பு நிறைவடைந்தது; நாயகி மரியா தகவல்

prince movie sivakarthikeyan- நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது; இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக, படத்தின் நாயகி மரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

HIGHLIGHTS

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது; நாயகி மரியா தகவல்
X

prince movie sivakarthikeyan, prince movie sivakarthikeyan cast - சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

prince movie sivakarthikeyan- தெலுங்கில் வெற்றி பெற்ற 'ஜதி ரத்னாலு' பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பிரின்ஸ்'. இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.


சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன. நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் நாயகி மரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டது என்ற தகவலை அறிவித்துள்ளார்.


prince movie sivakarthikeyan cast-அவர் தனது பதிவில், 'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. மறக்க முடியாத பயணம். நான்கு மாதங்கள், வேறு ஒரு நாட்டில் சிறந்த மனிதர்கள் சூழ இருப்பேன் என நினைத்து பார்க்கவில்லை. இவர்கள் அளவிட முடியாத அளவிற்கு சிறந்த படைப்பாளிகள்; நண்பர்களுடன் இருப்பதாகவே உணர்ந்தேன் என்று, குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் பதிவுடன் நிறைவு பெற்றுள்ளது. முதலில் 'பிரின்ஸ்' படம், ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது டாக்டர், டான் என தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On: 23 Aug 2022 7:05 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்