செல்லத்தை மறக்காத பிரகாஷ் ராஜ்; விஜய் ரசிகர்கள் குஷி

Prakash Raj Latest Movie - நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் குறித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், விஜயை 'செல்லம்' என்று கொஞ்சி பேசியுள்ளது இணையத்தில் வைரலானது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செல்லத்தை மறக்காத பிரகாஷ் ராஜ்; விஜய் ரசிகர்கள் குஷி
X

‘விஜய் செல்லம்’ - பழைய அன்பு மாாறாமல்  கொஞ்சிய பிரகாஷ் ராஜ்

Prakash Raj Latest Movie -பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்' தளபதி 66' படத்தில் விஜய் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த படம்தான் 'வாரிசு' என்ற தலைப்பில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கிறார் விஜய். படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், சியாம், ஜெயசுதா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்து, பேட்டி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் 'வாரிசு' விஜய் படம். செல்லத்தோட வேலை பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் இணையறோம். இந்தப்படம் சிறப்பா இருக்கும் என, தெரிவித்துள்ளார். 'கில்லி' படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்துள்ள நிலையில் பிரகாஷ் ராஜ் பழசை மறக்காமல் விஜய்யை செல்லம் என குறிப்பிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

'வாரிசு' படத்தில் அப்ளிகேஷன் டிசைனராக, விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். 'வாரிசு' படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-08-16T17:26:15+05:30

Related News