/* */

14 வயதில் புதிய கார் வாங்கிய பூவையார்..

Poovaiyar New Car-விஜய் டிவியில் பாட வந்த சிறுவன், நடிகனாகி, 14 வயதில் புதிதாக கார் வாங்கியது, பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. எனினும் கார் வாங்கிய பூவையாருக்கு வாழ்த்துகள் குவிகிறது.

HIGHLIGHTS

Poovaiyar New Car
X

Poovaiyar New Car

Poovaiyar New Car-விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை பலரும் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக நிகழ்ச்சியை கொண்டு போவதால், நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்க்க முக்கிய காரணமாக இருக்கிறது. பாட்டு பாடும் நிகழ்ச்சி தான் என்றாலும், இந்த நிகழ்ச்சி வாயிலாக, அதில் பங்கேற்று பாடிய பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. அப்படி பல பேரை உதாரணமாக சொல்ல முடியும்.

சமீபத்தில், இந்த 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான செந்தில்-ராஜலட்சுமி, தாங்கள் கட்டிய புதிய வீட்டின் திறப்பு விழாவிற்காக, 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி இயக்குனர் ரபூபாவை சிறப்பு விருந்தினராக அழைத்தனர்.

அதே போல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன், 'பூவையார்' என்கிற 'கப்பீஸ்'. படங்களில் நடித்து வரும் இவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பூவையார் தனது காருடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில், வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தால் பிரபலமாகி விடுவார்கள் என்பதும், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும் தெரிந்த விஷயமே. விஜய் டிவி பிரபலங்கள் பலர் சொந்த வீடு, சொந்த கார் என மகிழ்ச்சியுடன் உள்ளனர். அந்த லிஸ்டில் தற்போது பூவையாரும் இணைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'சூப்பர் சிங்கர்' ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பூவையார். அந்த நிகழ்ச்சிகள் இரண்டாவது 'ரன்னர் அப்' ஆன பூவையார், அதன் பின்னர் ஒருசில படங்களில், பாடல்கள் பாடினார்.

மேலும் தளபதி விஜய் நடித்த 'பிகில்' 'மாஸ்டர்' மற்றும் விக்ரம் நடித்த 'கோப்ரா' உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். இதன்மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சிறுவயதிலேயே இவர் பிரபலமானார். இந்நிலையில் பூவையார் தற்போது சொந்த கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் உள்ள பூவையாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 14 ஆவது வயதில் கார் வாங்கியுள்ள பூவையாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்களான ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மைனா நந்தினி, சரத், புகழ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் உள்பட பலர் கார் வாங்கிய நிலையில், தற்போது பூவையாரும் கார் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது மக்களின் பேவரெட் பாடகராக வலம் வரும் பூவையார். சின்ன பையனாக நுழைந்து ஒரு கலக்கு கலக்கி, படங்களில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என அசத்துகிறார். தற்போது இவர் புதிய கார் ஒன்றையும் வாங்கி, அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் பூவையார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 9:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?