பொன்னியின் செல்வன் 2 - விரைவில் வெளியாகிறது அடுத்த 'அப்டேட்'

ponniyin selvan part 2 trailer tamil- பொன்னியின் செல்வன் 2ம் பாகம் திரைப்படம் வரும், ஏப்ரல் 28ல் வெளியாகிறது. இதையொட்டி, இன்னும் சில தினங்களில் இப்படத்தின் டீஸர் அல்லது ப்ரோமோ வெளியாக உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொன்னியின் செல்வன் 2 - விரைவில் வெளியாகிறது அடுத்த அப்டேட்
X

ponniyin selvan part 2 trailer tamil- பொன்னியின் செல்வன் பாகம் 2, சில தினங்களில்  டீஸர் அல்லது ப்ரோமோ வெளியாக வாய்ப்பு.

ponniyin selvan part 2 trailer tamil, ponniyin selvan part 2 trailer release date- எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் 2 பாகங்களாக படம் இயக்கியுள்ளார்.

எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் 2 பாகங்களாக படம் இயக்கி, அதில் முதல் பாகம், கடந்தாண்டு வெளியானது. முன்னணி நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, த்ரிஷா என ஏராளமானோர் இதில் நடித்தனர். முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதில் நடித்துள்ள நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வரும், ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது.


'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலை உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி, வரும் ஏப்ரல் 28 என்பதை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைக்காவியமாக மாற்றி ரசிகர்களை அசர வைத்திருந்தார் இயக்குநர் மணிரத்னம். லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஒரே மூச்சில் 150 நாட்களிலேயே 'பொன்னியின் செல்வன்' படத்தை 2 பாகங்களாக எடுத்து முடித்து விட்டனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது.


கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 2 பெரிய படங்கள் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அபார சாதனை செய்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகமே அசுர வசூல் சாதனை படைத்த நிலையில், அதன் 2ம் பாகம் இன்னும் வசூலை வாரி குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி மற்றும் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ள காட்சிகளும், பழிவாங்க துடிக்கும் நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோரது நடிப்பும், குறிப்பாக, ஆழ்வார்க்கடியனாக வரும் நம்பி கேரக்டரில் நடித்துள்ள ஜெயராம் நடிப்பும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் புதிய அப்டேட் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இது , டீஸர் அல்லது ப்ரோமோவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2ம் பாகம், புதிய 'அப்டேட்'டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Updated On: 24 Jan 2023 7:57 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...