/* */

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் அறிமுகம்

Ponniyin Selvan Characters- 'பொன்னியின் செல்வன்' படக்குழு மேலும் சில கதாபாத்திரங்களின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் அறிமுகம்
X

 ponniyin selvan characters - பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் அறிமுகம்.

Ponniyin Selvan Characters- கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது.


இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. விரைவில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்து பல அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது படத்தின் மேலும் சில கதாப்பாத்திரங்களின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.


அந்தப் பதிவில், "ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கரவர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும் விரும்பும் மகன்!" என்று குறிப்பிட்டு பிரகாஷ்ராஜ் சுந்தர சோழராகவும், ஜெயசித்ரா செம்பியன் மாதேவியாகவும் மற்றும் ரகுமான் மதுராந்தகனாகவும் நடித்திருப்பதாக சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 Sep 2022 9:57 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...