/* */

காதலர் தினத்தில் சர்ப்ரைஸ் தரும் பொன்னியின் செல்வன் டீம்!

அருள்மொழி வர்மன் - வானதி இருவருக்குமான காதல் பாடலாக இந்த பாடல் அமையும் எனவும், மெலோடியாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து நிச்சயம் பாடல் ஹிட் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

HIGHLIGHTS

காதலர் தினத்தில் சர்ப்ரைஸ் தரும் பொன்னியின் செல்வன் டீம்!
X

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் ஜெயம் ரவி மற்றும் படக்குழு

தமிழ் கூறும் நல்லுலகின் மிகப் பிரம்மாண்ட படைப்பு காலம் தாண்டியும் நிலைத்து நிற்கும் புதினம் பொன்னியின் செல்வன். இது மொத்தம் 5 பாகங்களாக புத்தகங்களாக வெளியானது. இந்த புதினத்தை படமாக எடுக்கும்போது பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனை சமாளித்து இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த பொன்னியின் செல்வன் படம் கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம், வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் படத்தின் புரமோசன் பணிகளைத் திட்டமிட்டு முடிப்பது, ஒரு மாத காலத்துக்கு முன்பே பயணங்களைத் திட்டமிடுவது என படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது முதல் அப்டேட்டாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி தெரியவந்துள்ளது.

ஜெயம்ரவிக்கான காதல் பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அருள்மொழி வர்மன் - வானதி இருவருக்குமான காதல் பாடலாக இந்த பாடல் அமையும் எனவும், மெலோடியாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து நிச்சயம் பாடல் ஹிட் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி 14ம் தேதி முதல் பாடலைத் தொடர்ந்து அடுத்த 2 வாரங்களுக்கு ஒரு அப்டேட் என அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் அப்டேட்களால் சமூக வலைத்தளங்கள் திணறப் போகின்றன. மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் ஒரு பாடல் வெளியாகும் எனவும் அடுத்து மார்ச் 28ம் தேதி வாக்கில் படத்தின் டீசரை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடுவது எனவும் அன்றைய தினம் பிரம்மாண்ட விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது படக்குழு.

Updated On: 8 Feb 2023 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!