பொன்னியின் செல்வன் முதல் பாடல்! வெளியானது அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு சிங்கிள் பாடலை வெளியிடுகிறார்களாம். அதுவும் இந்த வாரத்தில் ரிலீஸ் ஆகிறதாம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொன்னியின் செல்வன் முதல் பாடல்! வெளியானது அறிவிப்பு!
X

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு சிங்கிள் பாடலை வெளியிடுகிறார்களாம். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த பொன்னியின் செல்வன் படம் கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம், வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் படத்தின் புரமோசன் பணிகளைத் திட்டமிட்டு முடிப்பது, ஒரு மாத காலத்துக்கு முன்பே பயணங்களைத் திட்டமிடுவது என படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது முதல் அப்டேட்டாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி தெரியவந்துள்ளது.


முதலில் ஜெயம்ரவிக்கான காதல் பாடல் கடந்த மார்ச் 12ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களும் காத்திருந்தனர். அருள்மொழி வர்மன் - வானதி இருவருக்குமான காதல் பாடலாக இந்த பாடல் அமையும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த பாடலுக்கு பதில் முதலில் அகநக எனும் பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த பாடல், மெலோடியாக ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து நிச்சயம் பாடல் ஹிட் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

மார்ச் மாதம் 29ம் தேதி இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்நிகழ்வு வரும் ஏப்ரல் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர்களுக்கும் ஷூட்டிங் மிக ஜோராக நடந்து வருகிறது.


கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பிலும், ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பிலும் இருக்கிறார்கள். மேலும் ஜெயம் ரவியும் தனது சைரன் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜப்பான், விக்ரமுக்கு தங்கலான், திரிஷாவுக்கு லியோ என மிக பிஸியாக இருப்பதால் இவர்களை விழாவுக்கு அழைக்க திட்டமிட்டிருக்கும் தயாரிப்பு தரப்பு ஏப்ரல் 5ம் தேதிக்கு மாற்றியுள்ளது. அனைவரும் ஏப்ரல் மாதத்துக்குள் மற்ற படங்களிலிருந்து விடுபட்டு இந்த படத்துக்கான புரமோசன் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கொச்சி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மலேசியா, துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் இந்நகரங்கள் பட்டியலில் நியூயார்க், லண்டன் உள்ளிட்ட இன்னும் சில நகரங்களும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இம்முறை பொன்னியின் செல்வன் கொஞ்சம் பெரிய லெவலில் வெளியிடப்படவிருக்கிறது. இதற்காக பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகளிடம் 19 நாட்கள் கால்ஷீட் வாங்கி வைத்திருக்கிறாராம் மணிரத்னம்.

Updated On: 2023-03-18T08:40:57+05:30

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
 2. விளாத்திகுளம்
  விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
 3. சினிமா
  மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
 4. விழுப்புரம்
  காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
 5. தென்காசி
  தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
 6. தென்காசி
  தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
 7. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 8. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 10. திருவள்ளூர்
  பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்