/* */

ஏப். 28ல் 'பொன்னியின் செல்வன் பாகம் 2' ரிலீஸ்

வரும் 2023ல், ஏப்ரல் 28ம் தேதி, 'பொன்னியின் செல்வன் 2ம் பாகம்' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

HIGHLIGHTS

ஏப். 28ல் பொன்னியின் செல்வன் பாகம் 2 ரிலீஸ்
X

‘பொன்னியின் செல்வன் - பாகம் 2’ வரும் ஏப்ரல் 28ல் ரிலீஸ் செய்யப்படுகிறது.

எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல், உலக அளவில் புகழ்பெற்ற சரித்திர கதை. மொத்தம் 5 தொகுப்புகளாக வெளிவந்த இந்த நாவல், கல்கியில் தொடராக வந்த போதே, லட்சக்கணக்கான வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அன்று முதல் இன்று வரை போற்றி புகழப்படும் மிகச்சிறந்த கதையாக 'பொன்னியின் செல்வன்' பேசப்படுகிறது. நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும், அவர்களது வீரமும், ஒழுக்கமும், அறிவும், அவர்களது சிறந்த செயல்களும் என்றென்றும் பாராட்டும்படியாக உள்ளது.


இந்த நாவலில் இடம்பெற்ற அருள்மொழிவர்மன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலச்சோழன், வந்திய தேவன், பழுவேட்டரையர், நம்பி, குந்தவை, நந்தினி போன்ற கேரக்டர்கள் சாகாவரம் பெற்றவையாக அமைந்தன. இந்த கேரக்டர்களில் நடித்த ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்றவர்களின் சிறந்த நடிப்பு படத்தின் வெற்றியை இன்னும் பலமாக்கியது.

ராஜராஜசோழன் வாழ்க்கை வரலாறை கொண்ட இந்த நாவலை, படமாக்க வேண்டும் முதலில் ஆசைப்பட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரிடம் இருந்து, உலகநாயகன் கமல்ஹாசன் அதற்கான அனுமதியை பெற்றார். ஆனால், கால வெள்ளோட்டத்தில், அந்த நாவலை சினிமாவாக்க கமல்ஹாசனால் இயலவில்லை. அப்படி, கமல் அந்த படத்தை எடுத்திருந்தால் அதில், வந்தியதேவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் விரும்பியதை, கமல்ஹாசனே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.


அப்படிபட்ட மிகச்சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் படத்தை, இயக்குநர் மணிரத்னம் இயக்கினார்; இதன் முதல்பாகம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி, படம் அமோக வெற்றி பெற்றது. ரூ. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிக்குவித்தது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. முதல் பாகமாக அப்படம் வெளியான நிலையில், 2ம் பாகம், அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே 'பொன்னியின் செல்வன்' குறித்து இன்று முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.


அதன்படி லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் 2023 ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்திலேயே பிரமாண்டமாக எடுத்திருந்த நிலையில், 2ம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Updated On: 29 Dec 2022 8:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்