/* */

ஆயிரம் கோடியை நெருங்கும் சூப்பர் ஸ்டார் படம்! தட்டிவுட்டா தாறுமாறு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

HIGHLIGHTS

pathan box office collection report
X

pathan box office collection records

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பதான் திரைப்படம். ஷாருக் உடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். தேசப்பற்று மிக்க ஏஜெண்ட் ஒருவர் தனது தேசத்தை பிளவு படுத்தும் சக்திகளிடமிருந்து காப்பாற்றும் ஒரு படமாக அமைந்துள்ளது பதான் திரைப்படத்தின் கதை.

கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து ஷாருக்கான் நடிப்பில் படம் திரையில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். படம் தாறுமாறு ஹிட் அடித்து வசூலைக் குவித்து வருகிறது. இரண்டு வாரங்களைக் கடந்து 800 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருக்கிறது. இது பாலிவுட்டில் நல்ல விதமாக பார்க்கப்படுகிறது.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகான பாலிவுட் படங்கள் எதுவுமே நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ரசிகர்களின் கோவத்துக்கு ஆளான பாலிவுட் கலைஞர்கள் அனைத்து படங்களையும் பைகார்ட் பண்ணி உதறித் தள்ளிவிட்டனர்.

பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாருக் படங்கள் கடந்த 4 வருடங்களாக வெளியாகாததால், அவர் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. மேலும் இந்த படத்தில் தேசப்பற்று, தேச ஒற்றுமை குறித்து பேசியிருப்பதால் நிச்சயமாக நல்ல வரவேற்பை பெறும் என கூறியிருந்தனர். அப்படி எதிர்பார்ப்பைக் கொண்டவர்களுக்கு நல்ல தீனியாக அமைந்தது பதான் திரைப்படத்தின் காட்சிகள். சண்டைக் காட்சிகளும் சரி, தேசப்பற்று கொப்பளிக்கும் உணர்வு மிகுந்த காட்சிகளும் சரி ரசிகர்களிடையே அப்படி ஒரு இணைப்பை ஏற்படுத்துகின்றன.

ஷாருக்கானை எந்த அளவுக்கு கொண்டாட முடியுமோ அதனை சரியாக செய்து இயக்குநர் நல்ல பெயரை சம்பாதித்து விட்டார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரிய ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது பதான் திரைப்படம். இதனால் சிறப்பான வசூலையும் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் 2500 திரையரங்குகளுக்கும் அதிகமாக திரையிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் வசூல் 800 கோடியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பாலிவுட் வட்டாரங்கள் மட்டுமின்றி தமிழ் நாடு, கேரள மாநிலம், கர்நாடக மாநிலம், ஆந்திர, தெலுங்கானா மாநிலங்கள், கிழக்கிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பான வசூலைப் பெற்றுள்ளது பதான் திரைப்படம். கண்டிப்பாக இந்த படம் 1000 கோடியைத் தாண்டும் என கருதப்படுகிறது.

ஷாருக்கான் நடிப்பில் அடுத்து ஜவான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை இயக்கியிருப்பவர் நம் அட்லீ. அந்த படமும் 1000 கோடி வசூலை நோக்கியே களமிறக்கப்படுகிறது. ஒருவேளை அது சாத்தியமானால் அட்லீ உலக அளவில் புகழ் பெறும் இயக்குநராக மாறுவார். ஏற்கனவே விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர் அட்லீ. இம்முறை ஷாருக்குடன் இணைந்திருப்பதால் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிகழ்ந்து வருகிறது.Pathan

Updated On: 6 Feb 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்