/* */

5 நாட்களில் 560 கோடி ரூபாய்; திணறடிக்கும் உச்சக்கட்ட வசூலில் ஷாருக்கானின் 'பதான்'

pathan box office collection day 5- படம் ரிலீஸ் ஆன ஐந்தே நாட்களில், 560 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது ஷாருக்கான் நடித்த ‘பதான்’. மூச்சுத்திணற வைக்கும் இந்த அசுரத்தமான வசூலை பார்த்து, பலரும் திக்குமுக்காடி போயுள்ளனர்.

HIGHLIGHTS

5 நாட்களில் 560 கோடி ரூபாய்; திணறடிக்கும் உச்சக்கட்ட வசூலில் ஷாருக்கானின் பதான்
X

pathan box office collection day 5- ஐந்து நாட்களில், ரூ. 560 கோடி ரூபாய் வசூலித்த ‘பதான்’ (கோப்பு படம்)

pathan box office collection day 5, pathan box office collection day 5 in india- கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்துமே நஷ்டத்தை சந்தித்தன. அமீர்கான், ரன்பீர் கபூர் என பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது #BoycottBollywood என்ற டாக் அதிகம் டிரண்டாகி வந்தது, இதனாலேயே படங்களின் வசூல் மிகவும் பாதிப்படைந்தது.


இந்த நேரத்தில் தான் சில ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான்-தீபிகா படுகோனே நடித்த 'பதான்' திரைப்படம், வெளியானது. கடந்த 25ம் தேதி பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் வெளியாகியுள்ள, இப்படம் அசுரத்தனமான வேகத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகின்றன, உலகம் முழுவதும் படம் மொத்தமாக ரூ. 560 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வர ரசிகர்கள் அனைவருமே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

ஷாருக்கானின் இப்படம், வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை செய்யும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.


ஷாருக்கானின் 'பதான்' படம், பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மாற்றி எழுதிவிட்டதாக, தற்போது பரபரப்பாக கூறப்படுகிறது. ஷாருக்கான், ஐந்து ஆண்டுகளாக, திரையுலகில் இருந்து விலகி இருந்தார், மேலும் அவர் திரும்பி வருவதை அவரது மிகப்பெரிய விமர்சகர்கள் கூட அவரது உயர்ந்த திரை இருப்பை கவனிக்க வைத்துள்ளனர். இந்திய சினிமா வரலாற்றில், இந்த 'பதான்' படத்தில் அசுரத்தமான வெற்றியும், வசூலும் மைல் கல்லாக அமைந்து விட்டது.


கடந்த 25ம் தேதி முதல் 'பதான்' (இந்தி) படத்தின் வசூல் நிலவரம்

( 25ம் தேதி) புதன்: ரூ.57 கோடி

( 26ம் தேதி) வியாழன்: ரூ.70.50 கோடி

( 27ம் தேதி) வெள்ளி: ரூ 39.25 கோடி

( 28ம் தேதி) சனிக்கிழமை: ரூ. 53.25 கோடி

( 29ம் தேதி) ஞாயிறு: ரூ. 62-65 கோடி (ஆரம்ப மதிப்பீடு) மொத்தம்: ரூ. 282-285 கோடி (முன்கூட்டிய மதிப்பீடு)


சுமார் ரூ.390 கோடியை ஈட்டிய 'தங்கல்' படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து, இதுவரை இல்லாத மிகப்பெரிய இந்திப் படமாக 'பதான்' உருவாகி வருகிறது. இந்த எண்ணிக்கையை அதன் இரண்டாவது வார இறுதிக்குள் கடக்க வாய்ப்புள்ளது. டிக்கெட் புக்கிங்கில் படம் செய்த அசுரத்தனம் விரைவில் நிற்கப் போவதில்லை.


கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ரூ. 600 கோடி, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் ரூ. 500 கோடி என்ற அளவில், வசூலித்தன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' படங்கள் கூட, ரூ. 200 கோடி வசூலை தாண்டவில்லை. ஆனால், ரிலீஸ் ஆன ஐந்தே நாட்களில் ரூ. 560 கோடி வசூலை கடந்துள்ள 'பதான்' சினிமா ரசிகர்களை மட்டுமின்றி, திரைத்துறை சார்ந்தவர்களையும் பிரமிக்க வைத்துள்ளது.

Updated On: 30 Jan 2023 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...