/* */

தனுஷ் ரொம்ப 'பிஸி' - வெற்றிமாறன் படத்துக்கு ஓராண்டு 'கால்ஷீட்'

part 2 movies of Dhanush-நடிகர் தனுஷ், பல படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ‘ஹிட்’டான நிலையில் தனுஷின் நடிப்பில் வரிசையாக பார்ட் 2 படங்களும் உருவாகிறது. அதில் தனுஷ் நடிக்க உள்ள 5 படங்கள், பார்ட் 2 படங்களாக எடுக்கப்படுகிறது.

HIGHLIGHTS

தனுஷ் ரொம்ப பிஸி - வெற்றிமாறன் படத்துக்கு ஓராண்டு கால்ஷீட்
X

 part 2 movies of Dhanush - நடிகர் தனுஷ் 

part 2 movies of Dhanush, danush part 2 movies 2023- வடசென்னை – 2 : 2018 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில், வட சென்னை 2 படத்திற்காக பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கி வரும் நிலையில், இப்படத்தை முடித்துவிட்டு வட சென்னை 2 இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.


நானே வருவேன் – 2 : இயக்குனர் மற்றும் தனுஷின் அண்ணன் செல்வராகவன் பல ஆண்டுகள் கழித்து இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்த படம்தான் நானே வருவேன். சைக்கோ, த்ரில்லர், ஹாரர் படமாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் தனுஷின் இரட்டை வேட நடிப்பு பலராலும் பேசப்பட்டது. மேலும் செல்வராகவனின் ரசிகர்கள் அவரது இயக்கத்தை வரவேற்றுள்ளனர். இதனிடையே நானே வருவேன் 2 படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை – 2 : இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் உருவாகிய புதுப்பேட்டை படம் அப்போது பேசப்பட்டதோ, இல்லையோ, இப்போது அதிகமாகவே பேசப்பட்டு வருகிறது. கத்தி, ரத்தம், அரிவாள் , சூடுபிடிக்கும் வசனங்கள் என இப்படத்தில் அனைத்துமே தரமாக இயக்கப்பட்டிருக்கும். புதுப்பேட்டை படம்தான் தனது வாழ்க்கையில் முக்கியமான படம் என தனுஷ் பல மேடைகளில் தெரிவித்துள்ளார். இதனிடையே புதுப்பேட்டை 2 படம் கூடிய விரைவில் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கர்ணன் – 2 : 2021 ஆம் ஆண்டு தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கொடியன்குளம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தின் பாகம் 2 மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அசுரன் – 2 : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்து இருப்பார். ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் உரிமைகளை வேறு சமூக மக்கள் எப்படி பறிக்கிறார்கள் என்ற உண்மை கதையில் அமைந்த வெக்கை நாவலின் அடிப்படையிலேயே இப்படம் உருவானது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 2 தேசிய விருதுகளும் அசுரன் படத்திற்கு கிடைத்தது. இதனிடையே அசுரன் 2 படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை-2, அசுரன்-2 ஆகிய 2 படங்களுக்கு மட்டும் தனுஷ் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கால்ஷீட் கொடுக்க உள்ளாராம்.

Updated On: 18 Nov 2022 8:23 AM GMT

Related News