பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஹேமாவின் போட்டோஷூட் புகைப்படங்கள்
pandian stores meena latest photoshoot - பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஹேமாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
HIGHLIGHTS

ஹேமா ராஜ்குமார்
pandian stores meena latest photoshoot -பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் கடந்த 2018 ம் ஆண்டு முதல் ஒளிபரபரப்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஷீலாவுடன் சுஜிதா, ஸ்டாலின், வி.ஜே.சித்ரா, குமரன் தங்கராஜன் , ஹேமா ராஜ்குமார், வெங்கட் ரெங்கநாதன், சரவண விக்ரம் மற்றும் வி.ஜே.தீபிகா லட்சுமணபாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
pandian stores meena new look
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் வி.ஜே.சித்ராவின் மறைவுக்குப் பின், அவரது "முல்லை" பாத்திரத்திற்குப் பதிலாக காவ்யாவும், அதைத் தொடர்ந்து லாவண்யாவும் நடித்தனர். மேலும், விஜே தீபிகாவின் "ஐஷு" கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலி நடித்தார். தற்போது சாய் காயத்ரிக்கு பதிலாக நடிக்கிறார்.
பாண்டியனின் நான்கு மகன்கள் (சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் ஜெயக்கண்ணன்) அவர்களின் ஊரான குன்றக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற புகழ்பெற்ற மளிகைக் கடையை நடத்தி வருகின்றனர் . பாண்டியன் குடும்பத்தின் மூத்த மகனான சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகிய மூன்று குழந்தை சகோதரர்களை கவனித்துக் கொள்ள போராடுகிறார். மீனாட்சியாக (மீனா), ஜனார்த்தனனின் மூத்த மகள் ஜீவாவின் மனைவியாக, கயலின் அம்மாவாக ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார்.
hemaraj sathish pandian stores actress photos
மேலும் ஹேமா டைரி என்ற டியூப் சேனல் மூலம் பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் குறித்த வீடியோவையும் அவ்வப்போது வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 9ம் தேதி, ஹேமா ராஜ்குமார் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவியும் வந்தது.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பதிவில், நீங்கள் ஸ்ட்ராங்கான பெண் எனவும், நீங்கள் ஏன் திரைப்பட கதாநாயகியாக நடிக்க முயற்சி செய்யக்கூடாது எனவும் கமெண்டை பதிவு செய்திருந்தனர்.
மேலும் ரசிகர்கள் கமெண்ட்டில், சின்னத்திரை நயன்தாரா எனவும், நயன்தாரா உருமாற்றம்னு நினச்சுட்டேன் எனவும் பல்வேறு பதிவுகளில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில், தனது போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான படங்களை பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.