/* */

பகலும் பாதி ராவும் படம் எப்படி இருக்கு?

Pakalum Pathiravum Movie Review in Tamil-அங்கு ஒரு துப்பாக்கியும் இருப்பதைப் பார்த்து அவளுக்கு பயம் ஏற்படுகிறது. அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதில்தான் டுவிஸ்ட் ஒளிந்திருக்கிறது. அதுதான் இந்த கதையின் மிகப் பெரிய சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

HIGHLIGHTS

பகலும் பாதி ராவும் படம் எப்படி இருக்கு?
X

Pakalum Pathiravum Movie Review in Tamil-பகலும் பாதி ராவும் படத்தை ஸ்லோமோசன் ஷாட்களும், இசை டிராமாவும் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் அஜய் வாசுதேவ், இவர் மம்மூட்டி நடிப்பில் வெளியான மாஸ்டர்பீஸ் மற்றும் ஷைலாக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படத்துக்கு சில விசயங்கள் பொருந்தாவிட்டாலும் அவற்றை திணித்திருப்பது போல தோன்றுகிறது.

அஜய் வாசுதேவ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ரஜிஷா விஜயன், மனோஜ் கே யூ உள்ளிட்ட சில கதாபாத்திரங்களே வரும் இந்த படம் மார்ச் 3ம் தேதி வெளியாகியிருக்கிறது.

குஞ்சாக்கோ போபனின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் படத்தை வேற லெவலுக்கு தூக்கிச் செல்கிறது. ரஜிஷா விஜயனும் தன் பங்குக்கு நன்றாக நடித்திருக்கிறார். திருமணமாகாத அப்பாவி ஏழைப் பெண்ணாக, அம்மா அப்பாவுடன் சண்டைப்போடும் காட்சிகளிலும் அமர்க்களப் படுத்தியிருக்கிறாள்.



கதைச் சுருக்கம் | Pakalum Pathiravum Movie Story

கதை வயநாட்டில் துவங்குகிறது. மாவோயிஸ்ட்களைத் தேடி காடுகளில் காவல்துறை வேட்டை நடத்துகிறது. அவர்கள் காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கிலாம் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். ரஜிஷா விஜயன் அவளது குடிகார அப்பா, மேலும் அம்மா ஆகிய மூவரும் வாழ்ந்து வருகிறார்கள். சரியான சாப்பாடு இல்லை என்று அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கும் மெர்சி, அன்றும் அப்படி ஒரு சண்டையை நிகழ்த்துகிறாள். வாசலில் வண்டியில் வந்து நிற்கிறான் மைக்கேல். கொச்சியிலிருந்து வந்த வைல்டு லைஃப் ஃபோட்டோகிராஃபர் அவன். பைக் பிரச்னை காரணமாக அவன் எங்கும் செல்ல முடியாததால், அவளிடம் உதவி கேட்கிறான். நாளை காலை வரை தங்கிக்கொள்ள மெர்சியும் அனுமதிக்கிறாள்.

மைக்கேலுக்கான அறையைத் தயார் செய்ய சுத்தம் செய்யப்போகும் மெர்சி, மைக்கேலின் பையில் பணமும் நகைகளும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அங்கு ஒரு துப்பாக்கியும் இருப்பதைப் பார்த்து அவளுக்கு பயம் ஏற்படுகிறது. அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதில்தான் டுவிஸ்ட் ஒளிந்திருக்கிறது. அதுதான் இந்த கதையின் மிகப் பெரிய சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 7:14 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!