/* */

ஆஸ்கர் விருது விழா ஆரம்பமானது நம் வாசகர்களுக்காக சில செய்தி துளிகள்

94 வது ஆஸ்கர் விருது விழா 24 பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது விருது பெற்றவர்களில் இந்தியர் ஒருவர்.

HIGHLIGHTS

ஆஸ்கர் விருது விழா ஆரம்பமானது நம் வாசகர்களுக்காக சில செய்தி துளிகள்
X

94 வது ஆஸ்கர் விருது விழா ஆரம்பமானது.24 பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது விருது பெற்றவர்களில் இந்தியர் ஒருவர்.

ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 'டியூன்' !!

டியூன் (Dune) திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. (சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 6 பிரிவுகளில்...)டியூன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இதில் இந்தியர் ஒருவரும் ஆஸ்கர் வென்றுள்ளார். அவர் பெயர் நமித் மல்கோத்ரா. இவர் டியூன் படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டார். அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது. ...

ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் ,ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

சிறந்த முழு நீள அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை என்கேண்டோ (Encanto) திரைப்படம் வென்றுள்ளது...

சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை 'தி விண்ட்ஷீல்டு வைப்பர்' (THE WINDSHIELD WIPER) திரைப்படம் தட்டிச் சென்றது...

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை 'டிரைவ் மை கார்' (Drive My Car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இதனை யுசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) என்பவர் டைரக்ட் செஞ்சு இருந்தார்....

சியான் ஹிடர் இயக்கிய கோடா (CODA) திரைப்படத்தில் நடித்த நடிகர் ட்ராய் கோட்சருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.... ( காணொளி இணைப்பு -Troy Kotsur: Award Acceptance Speech | 28th Annual SAG Awards)

அனேல் கரியா இயக்கிய 'தி லாங் குட்பாய்' (The Long Goodbye) குறும்படம், சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தி உள்ளது....

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார். க்ருயெல்லா (Cruella) படத்துக்காக படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது....

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை சியான் ஹெடெர் வென்றுள்ளார். கோடா படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது....

சிறந்த திரைக்கதைக்கான விருதை கென்னத் பிரானா வென்றுள்ளார். பெல்பாஸ்ட் படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைச்சிருக்குது

சிறந்த ஆவணத்திரைப்படத்துக்கான விருதை சம்மர் ஆஃப் சோல் (SUMMER OF SOUL) திரைப்படம் வென்றுள்ளது. ...

சிறந்த இயக்குனருக்கான விருதை ஜேன் கேம்பியன் வெறுள்ளார். தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது....

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கிங் ரிச்சர்டு படத்தில் நடிச்சதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது....

தி ஐய்ஸ் ஆஃப் டேமி ஃபே (The Eyes of Tammy Faye) படத்தில் நடித்த நடிகை ஜெசிகா சஸ்டைன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை பெற்றார்..

கோடா (Coda) திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இது சியான் ஹிடர் இயக்கத்தில் வெளியான பிரெஞ்ச் படத்தின் ரீமேக் ...

தொகுப்பாளரை அறைந்த ஸ்மித்:

வில் ஸ்மித் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்ததால் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்துவிட்டுத் திரும்பினார்.அலோபீசியா என்னும் நோயினால் முடியை இழந்து வருகிறார் ஜடா ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 28 March 2022 6:08 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...