/* */

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ்

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ்
X

படத்தின் ஒரு காட்சியில் நடிகர் அர்ஜுன் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன்.

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ், கன்னடம் திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அர்ஜூன் சா்ஜா. இவர், கன்னடத்தில் நடித்திருந்த விஸ்மய என்ற படத்தில் (தமிழில் நிபுணன் என்ற பெயரில் வெளியானது) அவருக்கு ஜோடியாக சுருதி ஹரிஹரன் நடித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் நடிகை சுருதி ஹரிஹரன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரிடமும், நடிகை சுருதி ஹரிஹரனிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர்.

படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்

ஆனால், வழக்கு சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தும் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குனர் அருண், அரவிந்த் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்களில் அருண் விசாரணைக்கு ஆஜராக போலீசாரிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. மற்றவர்கள் விரைவில் ஆஜராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் அர்ஜூன் மீதான வழக்கை கப்பன் பார்க் போலீசார் மீண்டும் கையில் எடுத்து விசாரணையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Sep 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்