/* */

பிரபல நடிகை விவாகரத்து! கணவரை பிரிவதாக அறிவிப்பு!

மீண்டும் ஒரு நடிகை தனது கணவரைப் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பிரபல நடிகை விவாகரத்து! கணவரை பிரிவதாக அறிவிப்பு!
X

தெலுங்கு திரையுலகின் முக்கியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவியின் தம்பி மகள். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் அறிமுகமானார்.

கடந்த 2020ம் ஆண்டு சைத்தன்யா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நன்றாக வாழ்க்கை நடத்தி வந்தனர். சைத்தன்யா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் அடிக்கடி வந்து பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானும் சைத்தன்யாவும் ஒரு மனதாக பிரிய முடிவு எடுத்துள்ளதாகவும், ஆதரவாக இருந்த குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். புரிந்து கொண்டதற்கு நன்றி, புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க தேவையான தனிமையைக் கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 6 July 2023 5:00 AM GMT

Related News