/* */

அடுத்தடுத்த படங்களில் 'கமிட்' ஆன நடிகை நயன்தாரா; ரசிகர்கள் உற்சாகம்

nayanthara next movies 2023- ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில், நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்தடுத்த இரண்டு படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார்.

HIGHLIGHTS

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன நடிகை நயன்தாரா; ரசிகர்கள் உற்சாகம்
X

nayanthara next movies 2023-நடிகை நயன்தாரா.

Actress Nayanthara Signs 2 Back to back Movies, nayanthara next movies 2023- நடிகை நயன்தாரா ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா தமிழில் இரண்டு புதிய படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவர் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹருடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது, மேலும் மோகன் ராஜா இயக்குவதாகக் கூறப்படும் 'தனி ஒருவன் 2' படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'தனி ஒருவன்' திரைப்படம் 2015 இல் வெளிவந்தது, இதில் ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர் மற்றும் அது 'பிளாக்பஸ்டர்' ஹிட் ஆனது. இதன் இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும், அதில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர, நயன்தாராவும் ஜெயம் ரவியுடன் அஹ்மத் இயக்கத்தில் நடித்துள்ள 'இறைவன்' படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.


மேலும், நடிகை நயன்தாரா ஷாருக்கானின் 'ஜவான்' படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கணவன், மனைவி இருவரும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். நயன்தாரா ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஷாருக்கானின் 'பதான்' படம் பலகோடி ரூபாய் வசூல் ஈட்டி 'பிளாக் பஸ்டர்' ஹிட் அடித்துள்ளதால், அடுத்து வெளியாகும் 'ஜவான்' படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.


'ஜவான்' நிச்சயம் பல ஆயிரம் கோடி வசூல் குவிக்கும். இதனால் நயன்தாரா கேரியரும் உச்சத்திற்கு செல்லும். எனவே, நயன்தாரா பாலிவுட்டின் மிகப்பெரிய எண்ட்ரியாக இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்போது, மேலும் அவர் இரண்டு படங்களில், நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நயன்தாராவை பொருத்தவரை, மற்ற நடிகைகளை போல இல்லாமல், ஆளுமை நிறைந்த ஒரு நடிகையாக கவனிக்கப்படுகிறார். அவரை மட்டுமே, கதையின் நாயகியாக வைத்து எடுக்கப்படும் படங்கள், எளிதாக வெற்றி பெறுகின்றன. அதனால், நயன்தாராவை மையப்படுத்திய கதைகள் உருவாக்கப்பட்டு, அவரை கதையின் நாயகியாக நடிக்க வைக்க, இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், தமிழ் நடிகைகளில், ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக, நயன்தாராவை குறிப்பிடுகின்றனர்.

Updated On: 3 Feb 2023 7:04 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!