/* */

கார்த்தி படத்தில் நடிக்காத நயன்தாரா.. என்ன காரணம்?

nayanthara latest news - நடிகர் கார்த்தி படத்தில் நயன்தாரா நடிக்காததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

கார்த்தி படத்தில் நடிக்காத நயன்தாரா.. என்ன காரணம்?
X

நடிகை நயன்தாரா

nayanthara latest news - தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நான்கே மாதங்களில், வாடகை தாயின் மூலம் இரட்டையர் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. மேலும் குழந்தைகளை பெற்றுக்கொண்டதால், இனி நயன்தாரா புதிய படங்களில் ஒப்பந்தமாக மாட்டார் என தகவல்கள் வெளியாகியது.

இதனிடையே தற்போது நயன்தாரா புதிய படம் ஒன்றில் நடிக்க 'கமிட்'டாகி இருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. 'விக்ரம் வேதா' படத்தை தயாரித்த, 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். அவர் இயக்கும் படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

நயன்தாரா திருமணத்திற்கு முன் ஒப்பந்தமான படங்களில்தான் நடித்து வந்தார். அதாவது, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும், 'ஜவான்' படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.

மேலும் குழந்தை பிறந்த பின்பு, நயன்தாரா குடும்பத்திற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்றும், புதிய படங்களில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் ஆக மாட்டார் என்ற தகவலும் வெளியானது. தற்போது அதற்கு நேர் எதிராக புதிய படம் ஒன்றில், நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

nayanthara news

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில், வெளியான 'விக்ரம் வேதா' படத்தை தயாரித்த, 'ஓய்நாட் ஸ்டுடியோ' சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில்தான், நயன்தாரா நடிக்க உள்ளார். சமீபகாலமாக நயன்தாரா, பெண்களுக்கு முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார்.

ஆனால், இப்போது ஒப்பந்தமாகியுள்ள படத்தில் மாஸ் ஹீரோக்களான மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோருடன் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் திருமணத்துக்கு பிறகும், சினிமாவில் படு 'பிஸி'யாக நயன்தாரா செயல்பட உள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் தனக்கு உள்ள நம்பர் ஒன் இடத்தை யாருக்காகவும் நயன்தாரா விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. எப்போதுமே நான்தான் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற கர்வத்துடன் இருக்கவே, நயன்தாரா ஆசைப்படுகிறார்.

நடிகை நயன்தாரா தனது திரை வாழ்க்கையில் சில முக்கிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை தவறவிட்டுள்ளார். அந்த வகையில் பையா படத்தை அவர் தவறவிட்ட படங்களில் ஒன்று தான். கார்த்தி நடிப்பில் வெளிவந்த லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியை தேடித் தந்தது.

இந்த நிலையில், தமன்னா நடித்திருந்த கதாநாயகியாக கதாபாத்திரத்தில் முதன் முதலில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால், சம்பள விவகாரம் காரணமாக நயன்தாராவிற்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போவதாக அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Dec 2022 7:25 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...