/* */

Nayagan digital release very soon கமல் நடித்த நாயகன் நவ. 3ந்தேதி டிஜிட்டலில் 280 தியேட்டர்களில் ரிலீஸ்

Nayagan digital release very soon இயக்குனர் மணிரத்னத்தின் படமான நாயகன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு நவம்பர் 3 ந்தேதியன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் அந்த நாளை எதிர்நோக்கியுள்ளனர்.

HIGHLIGHTS

Nayagan digital release very soon  கமல் நடித்த நாயகன் நவ. 3ந்தேதி  டிஜிட்டலில் 280 தியேட்டர்களில் ரிலீஸ்
X
நடிகர் கமல் நடித்த நாயகன் வெற்றிப்படம் மீண்டும் டிஜிட்டலில்  வெளிவருகிறது (கோப்பு படம்)

Nayagan digital release very soon

1987 ம் ஆண்டு வெளிவந்த நடிகர் கமலின் நாயகன் டிஜிட்டல் மயத்தில் தமிழகம் உட்பட 3 மாநிலங்களில் 280 தியேட்டர்களில் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் சினிமா தொழில் கோலோச்சிய காலத்தில் திரைக்கு வந்த படம்தான் நாயகன் . இத்திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்னம். நடிகர் கமல் மற்றும் நடிகை சரண்யா ஆகியோர் நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

Nayagan digital release very soon


இந்த படமானது 1987 ம் ஆண்டு திரைக்குவந்தது. பாடல்கள் அனைத்தும் ஹிட் என்பதால் அந்த காலத்தில் பல தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றித்திரைப்படம் இது. நல்ல கதையம்சம் கொண்ட படமாக இது இருந்ததால் அக்காலத்தில் மக்கள் இதனை ரசித்து விரும்பி பார்த்தனர். அந்த காலத்தில் சேட்டிலைட் சேனல்கள் இல்லாத நிலையில் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். அதுமட்டுந்தான் பொழுது போக்கு. தீபாவளி, பொங்கல் என்றால் குறைந்த பட்சம் 20 திரைப்படங்கள் ரிலீஸ் ஆன கால கட்டம் அது. ரஜினி,கமல் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டால் போட்டியோ போட்டிதான் போங்க... எந்த படத்துக்கு அதிக கூட்டம் வருகிறது என படம் பார்த்தவர்களின் எண்ணி்க்கையினை பேப்பர் விளம்பரத்தில் போடுவார்கள். அந்த அளவிற்கு சினிமாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஆனால் காலமும் மாறியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கத்தால் தியேட்டர்களுக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்து கொண்டே ஒரே நாளில் பல படங்களைப் பார்க்கும் வசதி வந்துவிட்டது. இதுமட்டும் அல்லாமல் எந்த திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் 1 மாதத்துக்குள் எந்த சேனலிலாவது திரையிட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தியேட்டர்களுக்கு செல்வதையே மறந்துவிட்டனர். முக்கிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் தியேட்டர்களில் சென்று பார்க்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டனர்.

Nayagan digital release very soon


அந்த வகையில் நடிகர் கமலின் நாயகன் டிஜிட்டலில் அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்க வர உள்ளது. தமிழகம் முழுவதும் 280 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. நவம்பர் 3ந்தேதியன்று இந்த சினிமா திரைக்கு வர உள்ளது. இப்படத்தினை வெளியிடும் ஏடிஎம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கும்போது பிலிமில் எடுக்கப்பட்ட நாயகன் படத்தினை முற்றிலும் டிஜிட்டலில் மாற்றியுள்ளோம். ஆடியோ, கலர், ஆகியவைகளையும் தற்கால தொழில்நுட்பத்துக்கு தகுந்தாற்போல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் கர்நாடகா, கேரளா என 280 தியேட்டர்களில் இப்படத்தினை வெளியிட உள்ளதாக தெரிவித்தனர்.

அக்கால கட்டத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்ற படமான நாயகன் தற்போது டிஜிட்டலில் வெளியாக உள்ள நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கதை, பாடல்கள் என அனைத்துமே அருமையாக இருந்ததால் அந்த காலத்திலேயே வெற்றிக் கொடி கட்டிய படமாக இது திகழ்ந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் மயமாக வெளிவருவதால் இந்த படத்தில் மேலும் மெருகு கூட்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Updated On: 22 Oct 2023 5:28 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?