/* */

எனது திருமண வாழ்க்கை ஜாலியோ ஜாலி... நடிகை ஹன்சிகா மோத்வானி சென்னையில் பேட்டி

Hansika Cute Speech After Her Marriage, hansika motwani latest newsஎனது திருமண வாழ்க்கை ஜாலியோ ஜாலி என நடிகை ஹன்சிகா மோத்வானி சென்னையில் பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

எனது திருமண வாழ்க்கை ஜாலியோ ஜாலி... நடிகை ஹன்சிகா மோத்வானி சென்னையில் பேட்டி
X

நடிகை ஹன்சிகா மோத்வானி.

எனது திருமண வாழ்க்கை மிகவும் ஜாலியாக இருக்கிறது என நடிகை ஹன்சிகா மோத்வானி கூறி உள்ளார்.

Hansika Cute Speech After Her Marriage, hansika motwani latest newsதமிழ் திரை உலகில் சின்ன குஷ்பு என வர்ணிக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. மும்பை வரவான இவரை நீங்கள் குஷ்புவின் தங்கையா என வியந்து கேட்டவர்களும் உண்டு. இதற்கு காரணம் ஹன்சிகா மோத்வானியும் குஷ்பு போல் உருண்டு திரண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் மிகவும் கலர்புல் ஆக இருந்தார்.


Hansika Cute Speech After Her Marriage, hansika motwani latest newsதமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததால் தமிழ் திரை உலகில் கால் பதித்த சில வருடங்களிலேயே ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் மார்க்கெட் சற்று இறங்கிய பின்னர் ஹன்சிகா இந்தி படங்களில் கவனம் செலுத்தினார்.

Hansika Cute Speech After Her Marriage, hansika motwani latest newsஇந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் காதலரும், தோழியின் கணவராக இருந்து விவாகரத்து பெற்றவரும், தொழில் ரீதியான பார்ட்னருமான சோகைல் சதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணம் உலக புகழ் பெற்ற 450 ஆண்டுகள் பழமையான ராஜஸ்தான் அரண்மனையில் நடைபெற்றது.

Hansika Cute Speech After Her Marriage, hansika motwani latest newsதிருமணத்திற்கு பின்னர் முதல் முறையாக நடிகை ஹன்சிகா மோத்வானி ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்த வரவேற்பின்போது ஹன்சிகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Hansika Cute Speech After Her Marriage, hansika motwani latest newsநான் தற்போது சென்னைக்கு வந்திருப்பதால் எனது தாய் வீட்டிற்கு வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. எனக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைகிறேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Hansika Cute Speech After Her Marriage, hansika motwani latest newsஎன்னுடைய திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக , ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் ஏழு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளேன். எனது வாழ்க்கையை நான் நன்றாக அனுபவித்து வருகிறேன். நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் நடிப்பதில் சிக்கல் வருமா? என கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை அப்படி ஒன்றும் சிக்கல் இல்லை. இன்றைய இளைய தலைமுறையினர் எல்லாவற்றையும் ஒன்றாக தான் பார்க்கிறார்கள். நான் நடிப்பதை எல்லோரும் வரவேற்று இருக்கிறார்கள். ஆதலால் நான் தொடர்ந்து சினிமா சூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 31 Jan 2023 3:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?