ஷாருக், விஜய்யுடன் என்னுடைய சிறந்த பிறந்தநாள்.. அட்லீ பெருமிதம்

atlee birthday party - இயக்குனர் அட்லீ பிறந்த நாள் விழாவில் ஷாருக்கான், விஜய் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஷாருக், விஜய்யுடன் என்னுடைய சிறந்த பிறந்தநாள்.. அட்லீ பெருமிதம்
X

atlee birthday party - இயக்குநர் அட்லீ, பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் .

இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றியைத் தேடித்தந்தது.

shah rukh khan and vijay attended atlee birthday party

இதனையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அட்லீ மாறியதையடுத்து, கோலிவுட்டிலிருந்து பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதன்படி ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் தளபதி விஜய்யும் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த பார்ட்டியில் விஜய் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ள பதிவில், ''எனது பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும். எனது தூண்களுடன் என்னுடைய சிறந்த பிறந்தநாள். என் அன்பே ஷாருக்கான சார் & என்னோட அண்ணா என்னோட தளபதி விஜய்'' என படத்துடன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Sep 2022 7:01 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 2. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 3. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 4. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
 6. நாமக்கல்
  காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழா
 8. நாமக்கல்
  நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
 9. நாமக்கல்
  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரவள்ளி சாகுபடி விழிப்புணர்வு...
 10. நாமக்கல்
  ராசிபுரம் தேசிய வேளாண்மை அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்ற...