/* */

அஜித் திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள்..!

அடுத்த ஆண்டு(2023) பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

அஜித் திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள்..!
X

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன. அந்த நாள் அடுத்த ஆண்டு(2023) ஜனவரித் திங்களின் பொங்கல் திருநாள். எனவே, இருதரப்பு ரசிகர்களும் களத்தில் மோதத் தயாராகியுள்ளனர் என்கிற தகவலும் றெக்கை கட்டுகிறது. நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் அறிவித்தபடி பொங்கல் வெளியீடாக வெள்ளித்திரையில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப் படத்துக்குப் போட்டியாக அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், கோலிவுட் முழுதும் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. இந்தநிலையில், நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்துக்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக செய்திகள் வெளியானதால், நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்பட வெளியீட்டுக்கு ஆதரவாக பிரபலம் ஒருவர் நேரடியாகவே களமிறங்குகிறாராம்.

அடுத்த ஆண்டின் பொங்கல் திருநாள் கோலிவுட் ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டத்தை அளிக்கக் காத்திருக்கிறது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யும் அஜித்தும் நேருக்கு நேர் மோதுகின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு', நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் 'துணிவு' பொங்கலுக்கு வெள்ளித்திரைகளில் வெளியாக உள்ளதால், இப்போதிலிருந்தே கோலிவுட் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்; தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளால் 'வாரிசு' திரைப்படம் அறிவித்தபடி வெளியாகுமா என்கிற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது. அதேநேரம், 'வாரிசு' திரைப்படம் கண்டிப்பாகப் பொங்கலுக்கு வெளியாகும், அதை யாரும் தடுக்கவே முடியாது என படக்குழுவினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதனால், 'துணிவு' திரைப் படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொத்தமே தமிழ்நாட்டில் 1100 திரையரங்குகள் உள்ள நிலையில், 'துணிவு' திரைப் படத்துக்கு 800 திரைங்குகள் போய்விட்டால், 'வாரிசு' திரைப் படத்துக்கு சிக்கல் வரும் என சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. இருந்தாலும், 'துணிவு' திரைப் படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைத்து விடக்கூடாது என 'வாரிசு' படக்குழுவினர் பரபரப்பாக வேலை பார்த்து வருகிறார்களாம்.

நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளது. நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' திரைப் படத்தைத் தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், 'வாரிசு' திரைப்படத்தின் திரையரங்க உரிமையை வாங்கி இருப்பதால்,ரசிகர்களும் நிம்மதியடைந்துள்ளனர். இந்தநிலையில், 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார், அவரே 'வாரிசு' திரைப் படத்தை ஏரியா வாரியாக வெளியிட முடிவு செய்துள்ளாராம். இதனால், அஜித் குமாரின் 'துணிவு' திரைப் படத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அதிகமான திரையரங்குகளை புக்கிங் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளராம். இதனால், 'வாரிசு' மற்றும் 'துணிவு' திரையரங்க வெளியீட்டு வணிகத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 24 Nov 2022 5:26 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்