/* */

'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் மோகன்லால்?

'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன்லால்?
X

‘ஜெயிலர்’ படத்தில், ரஜினியுடன், மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாக, தகவல் வௌியாகி உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில், ரஜினியுடன் மலையாள நடிகர் மம்முட்டி நடித்தார். ரஜினி - மம்முட்டி இருவரும் நண்பர்களாக நடித்த இந்த படம், இன்றும் நட்புக்கு உதாரணமாக கூறப்படுகிறது. அதன்பின், ' உன்னைப்போல் ஒருவன்' படத்தில், உலகநாயகன் கமலுடன், மோகன்லால் நடித்தார். தீவிரவாதிகளை கொல்லும் தீவிரவாதியாக கமல், வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக அரசாங்கத்தை மிரட்டுவார். அந்த பிரச்னையை டீல் செய்யும் போலீஸ் அதிகாரி கமிஷனர் கேரக்டரில் மோகன்லால் மிக சிறப்பான நடிப்பை தந்திருப்பார்.


அதே போல், நடிகர் விஜய் உடன் ' ஜில்லா' படத்தில், மோகன்லால் நடிப்பும் பாராட்டை பெற்றது. 'காப்பான்' என்ற படத்தில்,சூர்யாவுடன் மோகன்லால் நடித்திருந்தார்.

நடிகர் மோகன்லாலை பொருத்தவரை, கொடுக்கப்பட்ட கேரக்டரை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக, இயல்பாக நடிக்கும் ஒரு சிறந்த நடிகர். ஏற்கனவே, ரஜினியுடன் மலையாள சினிமாத்துறை சார்ந்த மம்முட்டி நடித்துவிட்ட நிலையில், இந்த முறை, மோகன்லால் ரஜினியுடன் நடிக்கிறார். கமல், விஜய், சூர்யா ஆகியோரை தொடர்ந்து, ரஜினியுடன் மோகன்லால் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்ட் செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஜெயிலர்' படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார்.


இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஓரிரு தினங்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முதல் தடவையாக ரஜினியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் அவர்களின் ரசிகர் களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இப்போது தமிழ் படங்களில், ஹீரோ நடிகர்கள், இணைந்து நடிப்பதும், மற்ற மொழி சார்ந்த சினிமா நடிகர்கள் வில்லன் அல்லது பிற வேடங்களில் நடிப்பதும் டிரெண்டிங் ஆக மாறி விட்டது. இதற்கு முக்கிய காரணம், இப்போதைய படங்கள் தமிழில் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் வெளியீடு செய்யப்படுகிறது. அந்தந்த மொழிகளில் வௌியாகும் போது, அதில் அந்த மொழிகளில் நடிக்கும் பிரபல நடிகர்கள் இருந்தால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

Updated On: 7 Jan 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?