/* */

Meena இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த மீனா!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் மீனா. கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

HIGHLIGHTS

Meena இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த மீனா!
X

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர்தான் நம்ம மீனா. இவரது கணவர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் இறந்துவிட்ட நிலையில், இதனால் தமிழகமே இவருக்காக வருத்தப்பட்டது. சின்ன குழந்தையுடன் மீனா இருக்கிறாரே பாவம் என்றும் பரிதாபப்பட்டது. இந்நிலையில் அவரது இரண்டாவது திருமணம் குறித்தும் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.


தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் மீனா. கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். கதாநாயகியாக நடித்து ஒரு ரவுண்டு வந்தவர் இப்போது அண்ணி, அக்கா, அம்மா வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறனைக் காண்பித்து வருகிறார்.


படங்களை நடித்துக் கொண்டே இருந்தாலும் அழகிய குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தவருக்கு கடந்த ஆண்டு மோசமானதாக மாறிவிட்டது. அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழக்க அவரது வாழ்க்கையே ஒரு கணம் நொடிந்து போனது. பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறார் மீனா


கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட சராசரி தமிழ் பெண் மாதிரிதான் மீனாவும். நடிகை என்பதாலே மட்டும் அந்த பிரிவிலிருந்து அவர் மீண்டு வந்துவிடவில்லை. சமீபத்தில் அவருக்கு யூடியூப் சேனல் மூலம் ஒரு விழா கொண்டாடப்பட்டது. மீனா திரையுலகத்தில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆனதை விமர்சையாக கொண்டாடினர். அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கலந்துகொண்டு மீனாவை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் மீனாவின் கணவரைப் பிரிந்து அவர் வாழ்ந்து வருவதை எதேச்சையாக கூறினார். வருத்தமான விசயம் என்றே அவர் தெரிவித்த அந்த நொடி மீனாவின் கண்கள் குளமாகிவிட்டன. அவர் தனது கணவர் இல்லை என்பதையே ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.


இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த மீனா, இதையேதான் பதிலாக சொன்னார். தன் கணவர் தங்களுடன் இல்லை என்பதையே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பிரிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இப்போதைக்கு மகள்தான் உலகம். அவள் எதிர்காலத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு வருகிறேன். நல்ல கதைகள் தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

Updated On: 23 March 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்