/* */

வரும் மார்ச் மாதத்தில் 'மாமன்னன்' பராக்... பராக்... பராக்..!

Mari Selvaraj Maamannan Release Date -மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படம் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

வரும் மார்ச் மாதத்தில் மாமன்னன் பராக்... பராக்... பராக்..!
X

mari selvaraj maamannan release date - மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’ படம், வரும் மார்ச் மாதம் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

Mari Selvaraj Maamannan Release Date - சமூக உணர்வுள்ள படைப்புகளை, தனது படங்களில் பிரதிபலிக்கும் தமிழ் சினிமா இயக்குநர்களின் வரிசையில், மாரி செல்வராஜூம் ஒருவராக உள்ளார். அவரது இயக்கத்தில் வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' அற்புதமான படமாக பேசப்பட்டது. படித்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இளைஞனுக்கு நடக்கும் வன்கொடுமைகளை பற்றிய படம்தான் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்திற்கு ஒரு சரியான கதாநாயகனாக கதிர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.


அதேபோல், தனுஷ் நடித்த, ' கர்ணன்' படமும் அதிகாரவர்க்கத்தின் ஆணவத்திமிரை அப்பட்டமாக வெளிப்படுத்திய படம். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில், ஒரு குக்கிராம மக்களை, அடித்து துவம்சம் செய்யும் போலீஸ் அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகத்தை மையப்படுத்திய ஒரு படமாக, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில், அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் ஒரு சாதாரண ஏழை இளைஞனாக, தனுஷ் நடிப்பு, பேசப்பட்டது. 'கண்டா வரச்சொல்லுங்க, அவரை கையோடு கூட்டி வாருங்க' என்ற பாடல் பிரபலமாகி, பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது.


இயக்குநர் மாரி செல்வராஜ் 'கர்ணன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை, புகைப்படம் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது, உதயநிதி ஸ்டாலின் 'கலகத்தலைவன்' படத்தின் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அளித்த ஒரு நேர்காணலில், 'மாமன்னன்' அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளார்.


மாரி செல்வராஜ், சமூக உணர்வுள்ள படங்களை தரும் இயக்குநராக உள்ள நிலையில், 'மாமன்னன்' என்ற தலைப்பில் ரிலீஸ் ஆக உள்ள இப்படம், இப்போதே ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை துாண்டி இருக்கிறது. அதுவும், நகைச்சுவை நடிப்பில் துாள் கிளப்பும் 'வைகைப்புயல்' வடிவேலுவும் இந்த படத்தில் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், 'விக்ரம்' படத்தில், நடிப்பில் மிரட்டிய யதார்த்தமான நடிகரான பஹத் பாசில் இந்த படத்தில் நடித்திருப்பதும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், 'மாமன்னன்' படம் ரிலீஸ் செய்யப்படும் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதால், அது அதிகாரபூர்வமான தகவலாக உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 8:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...