/* */

மனிதன் படத்திற்கு பிறகு ரஜினி நடித்த மணிரத்னம் படம் எது?... தெரியுமா?

Manithan Next Movie With Rajini - 1987 ம் ஆண்டில் மனிதன் மற்றும்நாயகன் திரைப்படங்கள் ரிலீஸ்ஆனது. பின்னர் ரஜினியை வைத்து டைரக்டர் மணிரத்னம் வெளியிட்ட படம் எது?

HIGHLIGHTS



1987ம் ஆண்டு வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், மற்றும்நடிகை சரண்யா.


Manithan Next Movie With Rajiniதமிழ்த்திரையுலகான கோலிவுட்டில் தன்னுடைய சிறப்பான பட இயக்கத்தின் மூலம் முத்திரை பதித்தவர்களில் ஒருவர்தான் டைரக்டர் மணிரத்னம். இவருடைய பல படங்கள் தேசிய விருதினைப் பெற்றுள்ளன.இவர் ரஜினியை வைத்து எடுத்த படம் தளபதி. நிஜமாகவே தளபதி அருமையான திரைக்கதை. அதேபோல் உலக நாயகன் கமலஹாசனை வைத்து எடுத்த படம் நாயகன். இப்படத்தின் பாடல் இன்று எங்கு ? எப்போது? கேட்டாலும் ரசிக்க தகுந்த பாடல்களாகவும் கேட்க தகுந்தவைகளாகுவும் இருப்பதே மணிரத்னம் படத்திற்கு ஒரு அத்தாட்சியாக அமைகிறது.

சினிமா என்பது ஒரு மூன்று மணி நேரம் மட்டும் நேரத்தினை பொழுது போக்க என்றில்லாமல் அந்த மூன்றுமணிநேரம் பார்க்கக்கூடிய படமானது அவருடைய வாழ்க்கையிலோ அல்லது மற்றவர்களுடைய வாழ்க்கையிலோ இதுபோன்ற சம்பவங்கள் நடக்கையில் இப்படத்தில்வரும் காட்சிகள் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிடும் ஒரு மைய கருப்பொருளாக இருக்க வேண்டும். இதுபோன்ற கதைகள்தான் மக்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்க்கிறது.


நல்ல கதையம்சம், நேர்த்தியான படப்பிடிப்பு, தேவையற்றது எதுவும் இல்லாமல் தேவையானதை மட்டும் தன் திரைப்படத்தின் மூலம் விளக்கும் கொள்கையை மணிரத்னம் வைத்திருந்ததால் இவருடைய பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அண்மையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர் மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய ''பொன்னியின் செல்வன்'' கதையை மையமாக வைத்து பல முன்னணி நடிகர்கள் நடிக்க வைத்து 150 நாட்களில் படமாக்கி தற்போது ரிலீசாகி வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருப்பதோடு இப்படமானது நல்ல வசூலையும் தயாரிப்பாளருக்கு தந்துள்ளது. இது பொன்னியின் செல்வன் கதையின் பாகம்- 1 ஆக ரிலீஸ் ஆகியுள்ளது.இதன்இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டில் வெளிவர உள்ளது.

தமிழ்த்திரையுலகில் பல ரிஸ்க்குகளை எடுத்து நல்ல படங்களை வெளியிட்டவர் டைரக்டர்மணிரத்னம். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி இருவரையும் இணைத்து எடுத்த படந்தான்தளபதி. அப்படமும் அக்காலத்தில் வெற்றிப்படமாக அமைந்தது. அதுமட்டும்அல்லாமல் உலக நாயகன் கமலஹாசனை வைத்து இவர் எடுத்த திரைப்படந்தான் நாயகன்.நாயகனுக்குமுன்பாக ரிலீஸ் செய்யப்பட்ட சூப்பர்ஸ்டாரின் படமான மனிதனும் ஓரளவு வசூலை தந்ததுடன் நல்ல கதை இருந்ததால் அதுவும் நன்றாகவே ஓடியது என சொல்லலாம்.

நாயகன் படமானது வழக்கமான கமர்ஷியல் படமாக அமையாமல் ஒரு மையக்கதையை வைத்து எடுத்திருந்தார் டைரக்டர் மணிரத்னம். அதாவது மும்பையில் வேலுநாயக்கர் என்ற தமிழர் அங்குள்ள மக்களிடம் அன்பாக பழகி வாழ்ந்ததோடு பல உதவிகளை செய்துவந்தார். அந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக நாயகன் அமைந்தது. இதில் கமல் வித்தியாசமான கெட்அப்பில் தோன்றி நடித்திருப்பார்.

கடந்த 1987 ம்ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி நாயகன் படமானது ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது இவ்வருடத்தோடு 35வருடங்களை நிறைவு செய்கிறது நாயகன் திரைப்படம். நாயகன் திரைப்படமானது தமிழ்த்திரைப்படத்தில் ஒரு மைல்கல் என்று கூட சொல்லலாம். எப்போது? யாருக்கு? பார்த்தாலும் சலிப்பு தன்மையற்ற தன்மையையும் நல்ல மென்மையான பாடல்களோடு கதையம்சத்தோடு வெளியான படம்இது.


டைரக்டர் மணிரத்னம் இயக்கிய படமான தளபதியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.மெகஸ்டார் மம்மூட்டி

நாயகன் திரைப்படத்தில் 35 வது ஆண்டுவிழாவை கொண்டாடும் நேரத்தினை நெருங்கும் வேளையில் டைரக்டர் வெற்றி மாறன் டைரக்டர் மணிரத்னத்திடம் நாயகன் திரைப்படம் வெளியான நேரத்தில் மனிதன் திரைப்படமும் வெளியாகியிருந்தது. அது பற்றி அப்போது என்ன நினைத்தீர்கள் என கேட்போது, அவர்

நாயகன் திரைப்படமானது வெற்றிப்படமாக அமைந்தது எனக்கு ஒரு ஆத்மதிருப்தியை தந்தது. இது கலையுணர்வோடு எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது அல்லாமல் எல்லோரும் நன்றாக தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். ரஜினி நடித்த படமான மனிதனும் நன்றாக இருந்தது. நான் திரைப்படங்களைப் பொறுத்தவரை எதுவும் சொல்லமாட்டேன். ஆனால் ஏதோ ஒன்று நாம் நல்லநிலையில் செய்ததால்தான் இந்த வெற்றியானது கிடைக்கிறது என்பதை மட்டும் அடிக்கடி நினைவு கூர்கிறேன். அதாவது கலையுணர்வு மற்றும் வியாபார நோக்கத்திலும் வெற்றிப்படமாக அமைய நாம் ஒரு சில விஷயங்களை கூர்ந்து கவனித்து படம்எ டுக்க வேண்டும். அந்த திருப்தியானது இருபடங்களிலும் இருந்தது. கவுதம் மற்றும் வெற்றிமாறனின் திரைப்படங்களும்இதுபோன்று அமைய வேண்டும் என தெரிவித்தார்.

நாயகன் திரைப்படமானது இன்று வரை இந்திய சினிமாக்களில் ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.ஆகையால் திரைப்படம் என்பது வணிகரீதியான நோக்கோடு இல்லாமல் ஒரு நல்ல கதையம்சம் பொருந்தியதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு உண்மையினை அல்லது நிகழ்வை படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றார்.

திரைப்படங்கள் ஒரு சமூக உண்மையை மையமாக வைத்து எடுப்பதால் பல விஷயங்கள் படத்தினை பார்ப்பவர்களை போய் சேர்கிறது. அந்த விஷயம் அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடுகிறது. பின் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் இத்திரைப்படத்தின் நிகழ்வுகள் அவர்கள் கண்முன் வந்து நல்ல முடிவினை எடுக்க பயனளிப்பதாகவும் இருக்கவேண்டும் என்றார். படம் எடுக்க காலதாமதம் ஆனாலும் படம்பார்ப்பவர்களின் மனதை ஆக்ரமிக்க கூடிய படமாக எடுப்பதே டைரக்டர் மணிரத்னத்தின் பிளானாக உள்ளது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளது. இதிலும் தனது முத்திரையினை மணிரத்னம் பதிப்பார்.அதுவும்வெற்றிப்படமாகத்தானிருக்கும்... புரடொக்‌ஷன் குழுவான லைக்காவும் இதற்கு போதிய ஒத்துழைப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொன்னியின் செல்வனில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளும் எதிர்நோக்கியுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 10:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை