/* */

ரஜினிக்கு வில்லனாக மம்மூட்டியா? உண்மையை உடைத்த நெல்சன்!

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டியிருந்தது மம்மூட்டியா? உண்மை இதுதான்!

HIGHLIGHTS

ரஜினிக்கு வில்லனாக மம்மூட்டியா?  உண்மையை உடைத்த நெல்சன்!
X

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நெல்சனிடம் கேட்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூல் மழை பொழிந்துக் கொண்டு இருக்கிறது. விமர்சன ரீதியா பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கு நிகராக சிவராஜ்குமார், மோகன்லால் கேமியோவும் பாராட்டப்பட்டது. இருவருக்கும் மாஸான என்ட்ரி கொடுத்து இரண்டு பேருக்கும் வேற லெவலில் காட்சிகள் அமைத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டினார்கள். கேரளா, கர்நாடகாவில் கூட ஏகப்பட்ட வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்திருப்பது தெரியவருகிறது. இந்த படத்தில் வேறு சிலரும் நடிக்க வாய்ப்பிருந்திருக்கிறது.

முதலில் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க நெல்சன் சிவகார்த்திகேயனை மனதில் வைத்திருந்தாராம். ஆனால் அவரை நடிக்க வைத்தால் தொடர்ந்து வில்லனாக நடிக்கும்படி ஆகிவிடக்கூடாது வளர்ந்து வர்ற பையன் என ரஜினிகாந்த் அவர் வேண்டாம் வேறு நடிகரை போடச் சொல்லிவிட்டதாக தகவல். மேலும் இந்த படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணாவையும் நடிக்க வைக்கலாம்னு நெல்சன் யோசிச்சிருந்தாராம். அவரோட கால்ஷீட் கிடைக்கலன்னும் சொல்றாங்க.

கமல்ஹாசனும் இந்த படத்தோட வெற்றிக்கு வாழ்த்து சொல்லிவிட்டார். படமும் கிட்டத்தட்ட இந்திய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மம்மூட்டியும் இந்த படத்துல நடிச்சிருக்கணும்னும் அவரு இடத்துலதான் விநாயகன் நடிச்சார்னும் சிலர் கிளப்பி விட்டாங்க. ஆனா இது எந்த அளவுக்கு உண்மைனு தெரியாம பலர் இருந்தாங்க.

இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினிகாந்த் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைக்க நினைத்திருந்ததாகவும் பின்னர் அது வேண்டாம் என விநாயகனை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியிருப்பார். இந்நிலையில், அவர்தான் மம்மூட்டி என்று பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனால் உண்மையில் அது குறிப்பிட்ட எந்த நடிகரும் இல்லையாம். பொதுவாக ஒரு பெரிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களாம்.

அதனால் ரஜினிகாந்த் தனக்கு நெருங்கிய நண்பரான ஒருவரை மனதில் வைத்திருந்ததாகவும் அவரை பின்னர் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்சனே என்ன சொல்லிருக்கார்னா...ஒரு பெரிய நடிகர அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எண்ணினோம் ஆனால் அதன்பிறகு விநாயகன் நடிப்பில் ஸ்கோர் பண்ணிவிட்டார் என்று தெரிவித்தார்.

Updated On: 17 Aug 2023 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்