/* */

நடிப்புக்கு 'குட்பை' சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், 'இனி சினிமாவில் நடிக்கப்போவது இல்லை. 'மாமன்னன்' படமே எனது கடைசி படம்,' எனத் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நடிப்புக்கு குட்பை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
X

சினிமா நடிப்புக்கு  ‘டாட்டா’ காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ( கோப்பு படம்)

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் நடிகர், அரசியல்வாதியாக, தற்போது தமிழக அமைச்சராகவும் அந்தஸ்து பெற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை விநியோகம் செய்யும் திரையரங்க விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவரது முதல் படத்திலிருந்து இவரது காமெடி கலந்த நடிப்பை ரசிகர்கள் கண்டு வியந்தனர். 15க்கும் குறைவான படங்களே நடித்துள்ள ஸ்டாலின், அரசியல் பயணத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால், சினிமாவுக்கு 'முழுக்கு' போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாக, தன் பயணத்தை தொடர்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, நடிகர் உதயநிதிக்கு 'முற்றுப்புள்ளி' வைத்தது 'மாமன்னன்'.


கடந்த 2012ல் துவங்கி, 2022 வரை அவரது 11 ஆண்டு கால சினிமா வாழ்க்கை

ஒரு கல் ஒரு கண்ணாடி, இதுதான் உதயநிதி, வெள்ளித்திரையில் அறிமுகமான முதல்படம். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவை மட்டுமே படத்தில் பிரதானமாக இடம் பெற்றது. தனது முதல் படத்திலேயே நடிகராக வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

இது கதிர்வேலனின் காதல், 2014ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். படம் அவ்வளவாக திரையரங்கில் ஓடவில்லை. ரசிகர்கள் படத்தை ரசிக்கவில்லை. அதுபோல், 2015ம் ஆண்டு வெளியான 'நண்பேன்டா' நயன்தாரா,உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து நடித்த இரண்டாவது படம். இந்த படமும் தோல்வியடைந்தது. அடுத்து, 2016ல் வெளியான 'கெத்து' படமும், ஓடவில்லை. இதே ஆண்டில் வெளியான 'மனிதன்' படமும், 'சரவணன் இருக்க பயமேன்' 2017 ம் ஆண்டு வெளியான படமும் வெற்றி பெறவில்லை.

அடுத்து, 'பொதுவாக எம்மனசு தங்கம்' 2017ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் கிராமத்து கதையை மையமாக கொண்டது. இதுவும் ரசிகர்களிடம் எடுபடாமல், தோல்வியடைந்தது. அதே ஆண்டில் வெளியான 'இப்படை வெல்லும்' படமும் தோல்வியை சந்தித்தது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து, அடுத்து வந்த ஐந்து படங்களுமே, உதயநிதிக்கு பெரிய வெற்றி படங்களாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டில், 2018ல் வெளியான 'நிமிர்' படம், பரவலாக கவனிக்கப்பட்ட படமாக உதயநிதிக்கு அமைந்தது. 2019ல் வெளிவந்த 'கண்ணே கலைமானே' படம், எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதையடுத்து, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படம், உதயநிதிக்கு சிறந்த படமாக அமைந்தது. 'த்ரில்' படமான இதில், கண் பார்வையற்ற கேரக்டரில் சிறந்த நடிகராக நடித்திருந்தார் உதயநிதி. தொடர்ந்து நடப்பாண்டில் 'நெஞ்சுக்கு நீதி' மற்றும் சமீபத்தில் 'கலகத்தலைவன்' ஆகிய படங்கள், உதயநிதி நடிப்பில் வெளிவந்தது. இதில், 'கலகத்தலைவன்' ஆக்‌ஷன் படமாக அமைந்தது.

அடுத்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' படம், வரும் பிப்ரவரி அல்லது மாரச் மாதம் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ், உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமே, தனது கடைசி படம் என அறிவித்துள்ளார் உதயநிதி. இதற்கிடையே கமல் படம் ஒன்றில் .உதயநிதி நடிப்பதாக இருந்ததை கைவிட்டு விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உதயநிதி படங்களை பொருத்தவரை, அவரது படங்களில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்தது, படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. மேலும், ஒரே மாதிரியான தோற்றத்தில், முகபாவனையில் உதயநிதி நடிப்பது, ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. திமுக வினர், உதயநிதி படங்களை கொண்டாடிய அளவுக்கு, சினிமா ரசிகர்களால் அவரது நடிப்பை ரசிக்க முடியவில்லை. மேலும், ஸ்டாலினுக்கு பிறகு, திமுக வின் தலைவராக, கட்சியை வழிநடத்தி எதிர்காலத்தில் தமிழக முதல்வராக ஆட்சி நடத்தக்கூடியவராக கட்சியினரால் கருதப்படும் உதயநிதி, அரசியலை விட, சினிமாவில் காட்டும் அதீத ஆர்வத்தை, கட்சியின் மூத்த நிர்வாகிகளும் விரும்பவில்லை.

எனினும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நிமிர்', 'மனிதன்', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட படங்களில், உதயநிதி நடிப்பு யதார்த்தமாக இருந்ததும் உண்மை. குறிப்பாக, 'சைக்கோ' படத்தில், நல்ல நடிகராக தனது ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.

எனினும் தாத்தா கருணாநிதி ஆறு முறை தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர், தந்தை ஸ்டாலின், தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் என்ற நிலையில், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்று உள்ளார். எனினும், சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்ற உரிமைகளை அவர் கைவிட்டதாக அறிவிக்கவில்லை. பணமழை கொட்டும் அதை அவர் கைவிட போவதுமில்லை.

எனினும், இப்போதைக்கு நடிப்புக்கு அமைச்சர் உதயநிதி 'குட்பை' சொல்லி விட்டார்.

Updated On: 15 Dec 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!