/* */

நயன்தாராவை கிண்டலடித்த மாளவிகா மோகனன்.. ரசிகர்கள் கொந்தளிப்பு

nayanthara trolled by malavika mohanan - நயன்தாராவின் மேக்கப்பை கிண்டலடித்ததாக நடிகை மாளவிகா மோகனன் மீது ரசிகர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

நயன்தாராவை கிண்டலடித்த மாளவிகா மோகனன்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
X

நயன்தாரா- மாளவிகா மோகனன்.

nayanthara trolled by malavika mohanan - நயன்தாராவின் மேக்கப்பை கிண்டலடித்ததாக நடிகை மாளவிகா மோகனன் மீது ரசிகர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நயன்தாரா கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதைனைத்தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் சென்னை மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர். இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் திரைத்துறையினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் நயன்தாராவின் அடுத்த படமாக கோல்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்களை நயன்தாரா தனது கைவசம் வைத்துள்ளார். தமிழ்த் திரையுலகில் பெரும் உச்சத்திற்கு சென்ற நயன்தாராவை, பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கிண்டலடித்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், ஒரு திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிகை ஒருவர் உயிர்போகும் நேரத்தில் மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டுகொண்டு நடித்திருந்தார். கமெர்ஷியல் படமாகவே இருந்தாலும் அது எப்படி நடக்கும் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியிருந்தார்.

malavika mohanan latest news

இது ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை தான் மாளவிகா கலாய்த்துள்ளதாக அவருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி மாளவிகா மோகனனை வசைபாடி வருகின்றனர்.

மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில், தங்கலான் படத்தில் இருந்து கதாநாயகி மாளவிகா மோகனன் விலகியதாக தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த படத்தில் கதாபாத்திரத்திற்கு மாளவிகா மோகனன் நடிப்பு சரியில்லை எனக் கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் படத்திலிருந்து இவரை இயக்குனர் பா ரஞ்சித் நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மாளவிகா மோகனனுக்கு பதிலாக கதாநாயகியாக நடிக்க வேறொருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 3 Dec 2022 6:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?