'புஷ்பா-2'வில் அல்லு அர்ஜுனுடன் ஆட்டம் போடப்போகும் மலைகா அரோரா..!

Allu Arjun Pushpa Movie -நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா-2'வில் பாலிவுட் பச்சைக்கிளி மலைக்கா அரோரா, கவர்ச்சிப்புயலாக வீசப் போகிறாராம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புஷ்பா-2வில் அல்லு அர்ஜுனுடன் ஆட்டம் போடப்போகும் மலைகா அரோரா..!
X

பைல் படம்.

Allu Arjun Pushpa Movie -'புஷ்பா' கடந்த ஆண்டு திரையரங்கங்களில் வெளியாகி அகில இந்திய அளவில் வசூலிலும் ரசிகர்களிடையேயும் அதகளம் பண்ணியது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான, 'புஷ்பா' பாக்ஸ் ஆபீஸிலும் 400 கோடிகளுக்கு மேல் அள்ளிக் குவித்து ஆச்சர்யப்படுத்தியது.

தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை அண்மையில் பூஜையுடன் தொடங்கினர் படக்குழுவினர். இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிய வருகிறது.

'புஷ்பா' முதல் பாகத்தில் அனைவரையும் அள்ளி இழுத்து சூடேற்றியது சமந்தாவின் ஆட்டம்தான். 'ஊ சொல்றீயா' என்ற ஒரேயொரு பாடலுக்கு சமந்தா போட்ட ஆட்டம், ரசிகர்களை இன்னமும் உறங்கவிடாமல் உலுக்கி உசுப்பிக்கொண்டுள்ளது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களும் சமந்தாவின் கிறங்கடித்த அழகில் கிறுக்காகிப் போனார்கள். அந்த கிக்கை கலையவிடாமல், இதேபோல் ஒரு பாடலை இரண்டாம் பாகத்திலும் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இன்னொரு 'ஊ சொல்றீயா மாமா'-வாக இந்தப் பாடல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதிலும், சமந்தாவை ஆட வைக்க 'புஷ்பா' படக்குழு தீவிர முயற்சியில் இறங்கியது.

ஆனால், இப்போது சமந்தா நடிக்கவில்லை என தெரிய வருகிறது. இதனையடுத்து திஷா பதானி உள்ளிட்ட மேலும் சில பாலிவுட் நடிகைகளுக்கு படக்குழு பரவலாக வலை வீசிப் பார்த்தது. இதில், மலைப்பான கொழுகொழு குத்துவிளக்கு மலைகா அரோரா மந்தகாச புன்னகையோடு வந்து சிக்கியுள்ளாராம். பலான ஆட்டத்துக்கு பாலிவுட்டில் பளிச்சென்று பேர் வாங்கிய மலைகா அரோரா, 'புஷ்பா-2'வில் சமந்தாவையே சாய்த்துவிட்டு சலசலப்பார் என்கிற எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T14:56:42+05:30

Related News