'சூர்யா 42' படத்தின் முக்கிய அப்டேட்.. வலிமை மிக்க சரித்திர படமா?

surya 42 movie update- நடிகர் சூர்யாவின் ‘சூர்யா 42’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சூர்யா 42 படத்தின் முக்கிய அப்டேட்.. வலிமை மிக்க சரித்திர படமா?
X

surya 42 movie update - நடிகர் சூர்யா கடந்த 1997ம் ஆண்டு முதல், நேருக்கு நேர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, 24 போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

இவரின் நடிப்புத் திறமையால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2012 ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.

2020ம் ஆண்டு வெளிவந்த இவரின் சூரரைப்போற்று திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கியது. அதே நேரத்தில் சூர்யாவின் நடிப்பையும் சுதாவின் இயக்கத்தையும் ரசிகர்கள் பாராட்டினர். 78வது கோல்டன் குளோப்பில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் பிரிவில் திரையிடப்பட்ட பத்து இந்திய படங்களில் ஒன்றாக சூரரைப்போற்று தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் 93வது அகாடமி விருதுகளில் திரையிடப்பட்டது. ஆனால் பரிந்துரைக்கப்படவில்லை. இத்திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் பனோரமா பிரிவிலும் நுழைந்தது.

இதனைத்தொடர்ந்து 2021ல் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய எதற்கும் துணிந்தவன் படம் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியது.

Suriya42 is a fantasy genre film

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 42' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யா, திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் இணைந்து ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைகிறார்.

இப்படத்தை 10 மொழிகளிலும், 3டியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 9, 2022 அன்று வெளியிடப்பட்டது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த சூர்யா 42 எதை சார்ந்து இருக்கப்போகிறது என்றால், இது வலிமை மிக்க ஒரு சரித்திர படமாகத்தான் இருக்கும். படத்தின் ப்ரீ புரெடெக்‌ஷன் வேலைகள் வரும் மார்ச்சில் துவங்கப்படுகிறது. இதற்குமுன் 7ம் அறிவில் போதி தர்மராக நடித்து வரவேற்பை பெற்ற நிலையில், அதேபோல், இந்த படத்தில் ஒரு வாரியராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முக்கிய அப்டேட்டுகள் வெளியானதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

Updated On: 25 Jan 2023 6:33 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...