/* */

மாவீரன் திருட்டுக் கதையா? உண்மை என்ன?

மாவீரன் படத்தின் கதை உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

மாவீரன் திருட்டுக் கதையா? உண்மை என்ன?
X

சிவகார்த்திகேயன் நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது மாவீரன் திரைப்படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக சரிதாவும் தங்கையாக விஜய் டிவி புகழ் மோனிஷா பிளஸ்ஸியும் நடித்து அசத்தியிருந்தனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக இசை, பரத் ஷங்கர் சிறப்பாக கையாண்டிருந்தார், சீனா சீனா பாடலும் சரி, வண்ணாரப்பேட்டையில பாடலும் சரி சிறப்பான டிரெண்டிங் சாங்காக அமைந்திருந்தது. அதேநேரம் பின்னணி இசையிலும் அவர் தனது திறமையை நிரூபித்திருந்தார். சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறும் இடத்திலும், வில்லனுக்கான பின்னணி இசையையும் மிகவும் பொருத்தமானதாக அமைத்திருந்தது படத்துடன் நம்மை அதிகம் ஒட்டி இருக்க செய்தது.

மாவீரன் படத்தில் இத்தனை பிளஸ் பாய்ண்டுகள் இருந்தும் இந்த படத்தைப் பற்றி பிரபல திரை விமர்சகரான புளு சட்டை மாறன் இது ஒரு காப்பி அடித்து எடுத்த திரைப்படம் என்று கூறியது பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி உண்மையிலேயே இது காப்பி திரைப்படமா? வாருங்கள் பார்க்கலாம்.

மாவீரன் படத்தைப் பொறுத்தவரையில் இதில் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன. ஒன்று ஒரு கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட் தன்னை மாவீரனாக நினைத்து கதை எழுதுவது. இன்னொன்று அரசு குடியிருப்பில் நிகழும் ஊழல், அதனால் ஏற்படும் பாதிப்புகள். இந்த இரண்டையும் இரண்டு வெவ்வேறு வகையிலான கதையிலிருந்து சுட்டுவிட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏஜென்ட் ஜூன் படத்திலிருந்து கார்ட்டூனிஸ்ட் மாவீரனாகும் கதையை உருவியிருப்பதாக பிரபல யூடியூப் ரிவியூவர் நீல சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிஸ்மி வலைப்பேச்சு நிகழ்ச்சியில் வேறொரு கதையைச் சொல்கிறார். அந்த கதை ஏற்கனவே ஒரு பிரபல உதவி இயக்குநர், யோகிபாபுவை மனதில் வைத்து எழுதிய கதையாம்.

பினி சுப்ரமணியன், வேலாதயும் படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் 4 ஹிந்தி படங்களில் பிரியதர்ஷனுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அப்போது இவர் அப்பார்ட்மெண்ட் எனும் பெயரில் ஒரு கதையை பதிவு செய்துள்ளார். இந்த கதை குறித்து இவர் ஒரு பக்கத்தில் யோகி பாபுவிடமும் மறுபக்கத்தில் ஹிந்தியில் பிரபலமான பட நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

பினு சுப்ரமணியன் தனது கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டு, தயாரிப்பாளரின் ஆலோசனைப் படி ஆர்ஜே பாலாஜி அல்லது சூரி இருவரில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துவிட்டாராம். இதனால் யோகிபாபுவை டீலில் விட்டிருக்கிறார். ஆனால் யோகி பாபு இந்த கதையை திருடி மடோன் அஸ்வினிடம் கொடுத்து அதை டெவலப் செய்து படமாக எடுத்திருக்கிறார்கள் என்று பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார்.

பினு சுப்ரமணியன் கதையை யோகி பாபு மூலமாக திருடி மண்டேலா கேமராமேன் வழியாக மடோன் அஸ்வினுக்கு கதை சென்றிருக்கிறது எனும் பொருள்படும்படி பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார். இவர் சமீப காலங்களில் யோகி பாபு குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 July 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  4. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  5. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  7. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  8. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  9. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்