/* */

பாக்ஸ் ஆபிஸை துவைத்து தொங்க போட்ட மாவீரன்.. 3 நாள்ல எத்தனை கோடி தெரியுமா?

வெளியாகி 3 நாட்களில் பட்ஜெட்டைத் தாண்டி வசூல் செய்து பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது மாவீரன்

HIGHLIGHTS

பாக்ஸ் ஆபிஸை துவைத்து தொங்க போட்ட மாவீரன்.. 3 நாள்ல எத்தனை கோடி தெரியுமா?
X

தேசிய விருது வாங்குன இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்துல நம்ம சிவகார்த்திகேயன் நடிச்சிருக்குற மாவீரன் படம் பட்டி தொட்டியெல்லாம் வசூல் செஞ்சிட்டு இருக்கு. அதிதி, மிஷ்கின், சரிதானு எல்லார் நடிப்பும் பாராட்டப்பட்டுட்டு இருக்குற சமயத்துல மாவீரன் வசூல் பத்தி வர்ற நியூஸ் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு பிளாக்பஸ்டர் பார்சல் னு சொல்ல வைக்குது. 3 நாள்ல இந்த படம் எவ்வளவு வசூல் செஞ்சிருக்குன்னு தெரியுமா? வாங்க பாக்கலாம்.

தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நட்சத்திரம் சிவகார்த்திகேயன். இவரது ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. சாதாரண கல்லூரி மாணவராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ஆரம்பித்தவர் அடுத்தடுத்து தனது கடின முயற்சியால் இன்று தமிழகத்தில் நம்பர் 1 நடிகர் இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். விரைவில் விஜய்க்கு போட்டியாக பல திரைப்படங்களை 100 கோடி வசூலில் சேர்ப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த டாக்டர், டான் என இரண்டு படங்களிலும் 100 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன், இந்த படத்திலும் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவார் போலிருக்கு.

ஆமாங்க.. திரும்பவும் ஒரு 100 கோடி படம் கொடுக்கப்போறாரு சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட இந்த வாரம் முடியுறதுக்குள்ள 100 கோடி வசூலை எட்டிடும். கடந்த மூனு நாள்ல மட்டும் 47 கோடி ரூபாய் வசூல் செஞ்சிருக்கு மாவீரன். தமிழ்நாட்டுல மட்டும் நேத்து வரைக்கும் 27 கோடி ரூபாய் வசூலிச்சிருக்கு. இந்த வாரமும் பெரிய அளவுக்கு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகப்போறது இல்லங்கறதால நிச்சயம் மாவீரன் பெரிய வசூல் சாதனைய படைக்கும். இது சிவகார்த்திகேயனோட ஆல்டைம் பெஸ்ட்டா அமையும்.

வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களில் 47 கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது மாவீரன் திரைப்படம். இந்த வாரமும் பெரிய அளவில் வேறெந்த படங்களும் ரிலீஸ் இல்லை. மாமன்னன் படம் போட்டிருந்த திரையரங்குகளிலும் மெல்ல மெல்ல மாவீரன் படத்தை திரையிட ஆரம்பிக்கிறார்கள். இந்த வார இறுதியில் நிச்சயம் மாவீரன் படம் 100 கோடியைத் தாண்டும் என்று பலரும் கணித்திருக்கிறார்கள்.

முக்கியமா, சிவகார்த்திகேயன் படத்துல விஜய் சேதுபதி அப்படி என்ன பண்ணிருக்கார்னு தெரிஞ்சிக்கவே பல பேரு படத்துக்கு வர்றதா சொல்றாங்க. அவங்களுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் ரொம்பவே பிடிச்சிருக்கிறதாகவும் சொல்றாங்க.

maaveeran box office collection worldwide in tamil

maaveeran box office collection worldwide day 1 | முதல் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - 12 கோடி ரூபாய்

maaveeran box office collection worldwide day 2 | இரண்டாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - 15 கோடி ரூபாய்

maaveeran box office collection worldwide day 3 | மூன்றாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - 20 கோடி ரூபாய்

maaveeran box office collection worldwide day 4 | நான்காம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்

maaveeran box office collection worldwide day 5 | ஐந்தாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்

maaveeran box office collection worldwide day 6 | ஆறாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்

maaveeran box office collection worldwide day 7 | ஏழாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்

maaveeran box office collection worldwide day 8 | எட்டாம் நாள் கலெக்ஷன் உலகம் முழுவதும் - xx கோடி ரூபாய்

Updated On: 18 July 2023 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்