/* */

Maamannan Trailer பரியேறும் பெருமாள், கர்ணனைத் தொடர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் டிரைலர்!

மாரி செல்வராஜின் மாமன்னன் டிரைலர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

HIGHLIGHTS

Maamannan Trailer பரியேறும் பெருமாள், கர்ணனைத் தொடர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் டிரைலர்!
X

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கண்ணை நம்பாதே படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் வடிவேலு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் அழுத்தமான ஒரு கதையை பதிவு செய்ய இருக்கிறார் மாரி செல்வராஜ். ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம் ஜூன் 29ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மாமன்னன் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தரமானதாக வெளியாகியிருக்கிறது. பாடல்கள் பலரையும் கவர்ந்து வருகின்றன. பின்னணி இசையும் அழுத்தமானதாக இருப்பது டிரைலரில் கண்கூடே தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் ஏ ஆர் ரஹ்மானின் இசை வேறு லெவலுக்கு எலிவேட் செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.

வடிவேலு குரலுடன் ஆரம்பிக்கும் டிரைலர் நிசப்தமான ஒரு கதையைச் சொல்லுகிறது. நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம். அதை நான் வாழ்நால் முழுவதும் பாடிக் கொண்டிருப்பேன். கடைசியாக உண்மையைக் கேட்கும் காதுகளை நான் தேடிக் கொண்டிருப்பேன் என அவர் பேசுகிறார்.

டிரைலரின் பஹத் பாசிலின் அறிமுகம் அதிரடியாக இருக்கிறது. துப்பாக்கி சத்தத்துடன் அவரது அறிமுகம் அமைகிறது. ஆக்ரோஷமான ஒரு நபராக அவர் நடித்திருக்கிறார்.

வடிவேலுவும் உதயநிதியும் ஒரு வீட்டில் உள்தாழ்ப்பாள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். உதயநிதி கையில் வாள் ஒன்று இருக்கிறது. இந்த காட்சி படத்தின் முக்கியமான காட்சியாக இருக்கும் என்று தோன்றுகிறது. டிரைலரிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு காட்சியாக இது காட்டப்பட்டிருக்கிறது.

Updated On: 17 Jun 2023 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு