/* */

வசூல் மழை பொழியும் 'லவ் டுடே'

Love Today Day 5 Box Office Collection-சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர்களில் வசூல்மழை பொழிகிறது.

HIGHLIGHTS

வசூல் மழை பொழியும் லவ் டுடே
X

 love today movie total collection - வசூல் மழை பொழியும் ‘லவ் டுடே’

Love Today Day 5 Box Office Collection-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'லவ் டுடே'. இயக்குநராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். மேலும் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து, மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை துவக்கத்தில் இருந்து, இறுதி வரை, இந்த படம் கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது என்பது தான் அனைவரின் பொதுவான விமர்சனமாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில், ரூ. 20 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, நல்ல படங்களை வெற்றி அடைய செய்வதில், ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் வெளியான கன்னட படமான 'காந்தாரா' 16 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம். படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, ஹீரோவாகவும் நடித்திருந்தார். கன்னடத்தில், மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழிகளில் 'டப்' செய்யப்பட்டு, அந்த மொழிகளிலும் 'ஹிட்' ஆகி, 200 கோடி ரூபாய் வரை வசூலை எட்டியது.


இந்நிலையில், 'லவ் டுடே' படமும், வசூலில் முன்னிலை பெற்றுள்ளது. 'லவ்டுடே' படம், தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தை தெலுங்கில் 'டப்' செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 'லவ் டுடே' படத்தை தெலுங்கிலும் 'டப்' செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை, 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம்தான், விஜய் நடித்துவரும் 'வாரிசு' படத்தை தயாரித்து வருகிறது என்பது, குறிப்பிடத்தக்கது.


தற்போது, 'டப்பிங்' பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்', லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்', மணிரத்னம் இயக்கிய ' பொன்னியின் செல்வன்' ரிஷப் ஷெட்டி இயக்கிய 'காந்தாரா' படங்களின் வரிசையில், 'லவ் டுடே' படமும், ரசிகர்களின் பேராதரவு பெற்ற படமாக, வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன், பாலசேகரன் இயக்கத்தில், 'லவ்டுடே' என்ற படம், இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியானது. காதலை மையப்படுத்திய இந்த படமும், பெரிய வெற்றி படமாக விஜய்க்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்