/* */

ஒரே ஒரு ஹிட்! ஓஹோன்னு வருமானம்: கோடிகளில் புரளும் 'லவ் டுடே' இவானா

நடிகை இவானா நான்கு விளம்பர படங்களில் நடித்து 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

HIGHLIGHTS

ஒரே ஒரு ஹிட்! ஓஹோன்னு வருமானம்: கோடிகளில் புரளும் லவ் டுடே இவானா
X

லவ் டுடே படம் வெற்றி பெற்றாலும் பெற்றது அந்த பட சம்பந்தமான அனைத்து கலைஞர்களுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது என்றே கூறலாம். ஆரம்பத்தில் படத்தை வாங்க தயங்கிய ஏஜிஎஸ் நிறுவனம் இன்று பல கோடிகளில் படத்தின் வெற்றியால் புரண்டு கொண்டிருக்கிறது.

சமீப காலமாக தமிழ் திரையுலகில் இளம் நடிகைகளுக்கு பஞ்சமாகி வருகிறது. அதைப் போக்கும் வகையில் ரீ என்ட்ரி கொடுத்த இவானா ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதிலும் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறார். ஏற்கனவே இவர் நாச்சியார் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது. அதில் ஹீரோயினாக நடித்திருந்த இவானாவுக்கு தற்போது கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் அம்மணிக்கு படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றன. மேலும் படத்தின் வெற்றி இவானாவின் மவுசையும் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. வரும் படங்களில் அவருக்கு 35 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அந்த வகையில் தற்போது அவர் நான்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்து வரும் அந்த படம் முடிவடைந்து விட்டது.

அதற்கு அடுத்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் முடிவடைய இருக்கிறது. இதற்காக அவர் 35 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளுக்கு விளம்பரப்பட வாய்ப்புகள் அதிக அளவில் குவியும் என்பதால் விளம்பர படங்களிலும் அவர் நடித்து நன்றாக சம்பாதித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பதை விட பல மடங்கு சம்பளம் விளம்பரப்படத்தில் நடித்தால் கிடைத்துவிடும் என்பதை நன்றாக புரிந்து கொண்ட இவானா விளம்பர படங்களின் மூலம் அதிகமாக கல்லா கட்டி வருகிறார். இவர் இப்போது நான்கு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். விளம்பரப்படத்தில் நடிக்க மட்டும் இவர் 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அதில் இவர் நடித்த பான்ஸ் பவுடர் விளம்பரத்திற்கு மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம். மேலும் இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரும் படத்தின் வெற்றியை பொறுத்து தன்னுடைய சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம்.

அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகர்களின் பார்வை தற்போது இவானாவின் பக்கம் திரும்பி இருக்கிறது. அதனாலேயே இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இளம் நாயகியாக உருவெடுத்துள்ளார். மூத்த நடிகைகளே சினிமாவை ஆக்கிரமித்து உள்ள நிலையில் இவரின் வரவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Updated On: 20 Dec 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்