வசூல் சாதனை படைத்த 'லவ்டுடே'; ரூ. 100 கோடியை எட்டிப்பிடிக்க வாய்ப்பு

love today 20th day box office collection- இன்றைய காதலர்களின் போலி முகங்களை தோலுரித்து காட்டிய ‘லவ் டுடே’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதால், வசூலில் இப்படம் சாதனை படைத்து வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வசூல் சாதனை படைத்த லவ்டுடே; ரூ. 100 கோடியை எட்டிப்பிடிக்க வாய்ப்பு
X

love today 20th day box office collection - வசூல் சாதனை படைத்த ‘லவ்டுடே’

love today 20th day box office collection, love today box office collection till now- 'லவ் டுடே' படம் ரிலீஸ் செய்யப்பட்ட 20வது நாளில், பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் மாபெரும் வெற்றியால், ஏஜிஎஸ் நிறுவனத்தை, பிரதீப் மீண்டும் தலை நிமிர்த்தி விட்டார் என்ற பாராட்டும் கிடைத்துள்ளது.


தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் முதன் முறையாக நடிகராக களம் இறங்கி தானே எழுதி இயக்கிய படம் தான் 'லவ் டுடே' நவம்பர் 3ம் தேதி ரிலீசான இப்படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், இப்படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கி, திரையரங்குகளுக்கு விற்பனை செய்தது.

இதனிடையே 'லவ்டுடே' படம் வெளியான முதல் வாரத்திலேயே 21 கோடியை அள்ளியது. இரண்டாம் வாரத்தில் அது அப்படியே இரட்டிப்பாக தற்போது 55 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே 'லவ்டுடே' படம் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இன்னும் இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், படத்தின் தமிழக வசூல் கட்டாயம் 70 கோடி ரூபாயை தாண்டும் என கூறப்பட்டு வருகிறது.


மேலும், 'லவ்டுடே' படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.படத்தை வரும் நவம்பர் 25 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை நடிகர் விஜய் தேவர் கொண்டா ரிலீஸ் செய்த நிலையில், ஆந்திராவில் மட்டும் 45க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 'லவ்டுடே' படத்தின் வெளிநாட்டு ஓவர்சீஸ் உரிமையை, 'டைமண்ட் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனம் வாங்கி உள்ள நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இந்த படத்தின் வெளியீட்டு திரையரங்கு பட்டியல் வெளியானது. படம் ரிலீசாகி 20 நாட்களே ஆன நிலையில், இவ்வளவு சாதனையை 'லவ் டுடே' படம் செய்துள்ளதுதான் ஆச்சரியமாக உள்ளது.

இப்பொழுது இருக்கும் காலத்திற்கு ஏற்றது போல, காதலர்கள் எப்படி அவர்களை புரிந்து வைத்துள்ளார்கள், அவர்களது கையிலுள்ள மொபைல் போன்களால் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் எவ்வளவு உள்ளது என்பதை நகைச்சுவையுடனும் சென்டிமென்ட் காட்சிகளும், காதலுடனும் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதிலும், ஒருவரை பற்றி ஒருவர் மொபைல் போன் மூலம் தெரிந்துகொள்ளும் காட்சிகளில் அவர்கள் ஆவேசமாக பேசிக்கொள்ளும் காட்சிகளும், வசனங்களும் படத்தை ரசிக்க வைக்கிறது.


இந்த படத்தை குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதால் இப்படத்தை பிரபல போட்டி நிறுவனமான 'நெட்ப்ளிக்ஸ்' நிறுவனம் வாங்கி உள்ளது. இதனிடையே இப்படம் ரிலீசாகி, சில வாரங்களில் 100 கோடி ரூபாய் வரை எளிதாக சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Nov 2022 8:31 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...