/* */

காதல் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடும் பரத்! இதான் லவ்!

நடிகர் பரத்தின் வித்தியாசமான கதைத்தேர்வில் அசர வைக்கும் டிரைலருடன்புதிய திரைப்படம் லவ்!

HIGHLIGHTS

காதல் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடும் பரத்! இதான் லவ்!
X

பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்துள்ள புதிய படம் லவ். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் எப்படி இருக்கிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.


லவ் படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாகவே வித்தியாசமான பாணி படக் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பரத் இப்போதும் அப்படி ஒரு கதையில் நடித்திருக்கிறார்.


காதலிக்கும்போதே சில முரண்பாடுகளுடன் இருக்கும் இருவர் திருமணம் செய்துகொண்ட பிறகும் அடிக்கடி சண்டை போட்டு அமர்க்களப்படுத்துகிறார்கள். அப்படி ஒரு முறை எதிர்பாராத சமயத்தில் நடந்த சண்டையில் வாணி போஜன் கொல்லப்படுகிறார். பரத் நல்லவரா அவர் ஏன் வாணி போஜனைக் கொன்றார், நண்பர்கள் உதவியுடன் பரத் என்ன செய்கிறார் இறுதியில் டிவிஸ்ட்டோடு படம் என்ன சொல்ல வருகிறது என்பதே லவ் படத்தில் கதை.


பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் போப் என நமக்கு மிகவும் அறிமுகமான பலர் படத்தில் இருக்கிறார்கள். ரோன்னி ரஃபெல் இசை அங்கங்கே டிரைலரில் நம் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகிறது. பிஜி முத்தையா ஒளிப்பதிவும் நிச்சயம் படத்தின் மீதான நேர்மறை எதிர்பார்ப்பைத் தூவுகிறது.


படத்தொகுப்பு அஜய் மனோஜ் டிரைலர் கட் நன்றாக அமைந்திருக்கிறது. படம் வரும் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.

Updated On: 14 July 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  5. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  10. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...