/* */

LEO Ticket Booking காலை முதலே கடுமையான கூட்டம்! எங்க தெரியுமா?

லியோ டிக்கெட் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் FDFS ஹவுஸ் ஃபுல்

HIGHLIGHTS

LEO Ticket Booking காலை முதலே கடுமையான கூட்டம்! எங்க தெரியுமா?
X

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் நிலையில் அதற்கான முன்பதிவுக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் கடுமையான கூட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் அடித்துப்பிடித்துக் கொண்டு டிக்கெட் புக் செய்து வருகிறார்கள்.

அதிகமான டிக்கெட் தேவை காரணமாக அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் என்று கூறப்படுகிறது. லியோ படத்துக்கு திருச்சூர் மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஆன்லைன் - ஆஃப்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது.


கொச்சியில் இன்று காலை புக்கிங் ஓபனான ஒரு மணி நேரத்தில் வேகமாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன.

தமிழகம், கேரளம், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களிலிருக்கும் திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி ஏற்கனவே ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாளம் மொழியிலும் திரைப்படம் வெளியாக இருப்பதால் அதற்கும் அதிக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முதல் நாளில் கிட்டத்தட்ட எல்லா காட்சிகளும் இன்றே புக்கிங் ஆகிவிடும் என்று தெரிகிறது.

புக் மை ஷோ

கிட்டத்தட்ட 75ஆயிரம் டிக்கெட்டுகள் புக்கிங் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக புக் மை ஷோ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் புக் மை ஷோ வலைத்தளமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பலரும் உள்ளே சென்று புக்கிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

10 லட்சம் பேர் இந்த படத்தைக் காண விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.


அமெரிக்க பிரீமியர்

அமெரிக்காவில் பிரிமீயர் முன்பதிவில்

850,796 டாலர்களுக்கு டிக்கெட் விற்றுத் தீர்ந்திருக்கிறது. மொத்தம் 565 இடங்களிலுள்ள - 1468 திரைகளில் லியோ திரைப்படத்தைக் காண 39275 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 16 Oct 2023 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு