லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?

லியோ படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
X

லோகேஷ் கனகராஜ் ( leo movie director ) இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு லியோ (Thalapathy 67 Movie Name ) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. லியோ படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. லோகேஷ் கனகராஜ், விஜய் இணையும் இரண்டாவது படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வாரிசு படத்தைத் தொடர்ந்து இந்த படம் ஒரு அதிரடித் திரைப்படமாக வர இருப்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண ஆடியன்ஸே படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். | leo movie director


லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காஷ்மீரில் 60 நாள் ஷூட்டிங் நடைபெற்றிருந்தது. அதில் விஜய், திரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் பல இன்ப அதிர்ச்சிகளும் காத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வெளியாகும் ஒரு மாதத்துக்கு முன்னர் ஆரம்பித்து தொடர்ந்து அப்டேட்களால் திணரடிக்கப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ( leo movie release date ) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. | leo movie release date


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் முதலில் நடித்த படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடித்திருப்பார். அந்த பவானி கதாபாத்திரத்தில் விஜய்க்கு சமமாக வெயிட்டாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி. இதனால் விஜய் ரசிகர்களே விஜய் சேதுபதியைக் கொண்டாடினர். இந்நிலையில், அடுத்தது லியோ படத்தில் இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம், அர்ஜூன், சஞ்சய் தத் என இந்த படத்தில் மிகப்பெரிய பட்டாளமே இருக்கிறது. | leo movie cast and crew


தற்போது கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜூன், விஜய் இடையேயான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த ஷூட்டிங் நிறைவடைந்ததும் விஜய் தனது டப்பிங் பணிகளைத் தொடர்கிறார். | leo movie latest update


கில்லி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட ஜோடி விஜய், திரிஷா இணை. இவர்கள் மீண்டும் இந்த படத்தில் இணைந்திருப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் படத்துக்கான பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 90களின் ஃபேவரைட் ஜோடி என்பதால் விஜய் ரசிகர்கள் தவிர்த்த மற்ற ரசிகர்களும் இந்த ஜோடியைத் திரையில் காண காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே காதல் காட்சிகள் இருக்கிறதா? மாஸ்டர் படத்தில் கபடி கபடி ரிகிரியேசன் செய்ததைப் போல இந்த படத்தில் எந்த பாட்டை ரீகிரியேட் செய்திருப்பார்கள் என எண்ணங்களை அலைபாயவிட்டு காத்திருக்கின்றனர் | leo movie heroine


லியோ படத்தின் புரமோசன் செப்டம்பர் மாதம் முழு வீச்சில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் விடலாம் என படக்குழு யோசித்து வருகிறதாம். வாரிசு படத்தைப் போல மூன்று லுக்குகளை வெளியிடலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார்களாம். ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் இந்த லியோ படத்தின் முக்கிய அப்டேட்டுகள் ரசிகர்களைக் கொண்டாடச் செய்யும்வகையில் இருக்குமாம். leo movie first look


ஆகஸ்ட் மாதம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுவரை அனிருத் படத்துக்கான இசைப் பணிகளைத் துவங்கவில்லை என்கிறார்கள். ஆனால் முதல் பாடலுக்கான டம்மி ஆடியோ ஏற்கனவே அனுப்பி அதனை வைத்து படப்பிடிப்பும் நடத்தி முடித்துவிட்டார்கள். படத்தில் இரண்டு பாடல்கள் இருப்பதால் அவை விஜய்யின் நடனத்துக்கு தீனி போடும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. leo movie first single


படம் வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு வருகிறது படக்குழு. அநேகமாக செப்டம்பர் இறுதியில் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதே மேடையில் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் குட்டிக் கதையும் கூறுவார் என்கிறார்கள். leo movie audio launch date


லியோ படத்தைத் தொடர்ந்து தளபதி 68 என்று அழைக்கப்பட்டு வரும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய். இந்த படத்துக்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் அதற்கு முன் முழு கதையையும் ஃபைனல் செய்துவிட்டு ஷூட்டிங் கிளம்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம் விஜய். | Thalapathy 68

Updated On: 1 Jun 2023 8:16 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
 3. மணப்பாறை
  திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
 4. காஞ்சிபுரம்
  மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
 5. பெருந்துறை
  மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
 7. ஈரோடு மாநகரம்
  ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
 8. கோவில்பட்டி
  காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
 9. கோவில்பட்டி
  தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
 10. வாசுதேவநல்லூர்
  தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா