/* */

லியோ படத்தின் முதல் நாள் வசூல்..! இத்தனை கோடியா?

லியோ படத்தின் முதல் நாள் வசூலே 100 கோடியா எட்டிவிட்டதாம்.

HIGHLIGHTS

லியோ படத்தின் முதல் நாள் வசூல்..! இத்தனை கோடியா?
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தின் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதாவது ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படங்களில் இன்று வெளியாகியுள்ள லியோவும் ஒன்று. தமிழகத்தில் இப்போதுதான் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ்.

மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் கைதி - விக்ரம் யூனிவர்ஸில் இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் இந்த படத்துக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.

முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடவேண்டும் என்று தமிழகத்தில் 9 மணிக்கு காட்சி நேரம் என்றால் 7 மணிக்கே திரையரங்குகளில் கூடி அமர்க்களப்படுத்திவிட்டனர் ரசிகர்கள். இதுமட்டுமின்றி தமிழகத்தில் பார்த்தால் நேரமாகிவிடும் என நேற்றே பெங்களூரு போன்ற பக்கத்து மாநிலத்திலிருக்கு நகரங்களுக்கு பயணமாகி அதிகாலையிலேயே படத்தைப் பார்த்துவிட்டு திரும்புகின்றனர்.

படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதோடு விட்டுவிடாமல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. படத்தில் அதிக வன்முறை இருப்பதாக சொல்லப்பட்டாலும் இது ஆக்ஷன் படம் என்பதால் நிச்சயமாக அதனை விரும்பும் ரசிகர்களே திரையரங்குக்கு செல்வார்கள் என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருப்பதை நினைவுகூர்வோம்.

படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் தருணங்கள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். படம் எல்சியூவில் இருக்கிறதா இல்லையா என்பதை முதல் காட்சி பார்த்துவிட்டு வந்தவர்கள் சொன்னால்தான் தெரிந்துகொள்ள முடியும்.

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 | Leo box office worldwide Day 1

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2 | Leo box office worldwide Day 2

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3 | Leo box office worldwide Day 3

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 4 | Leo box office worldwide Day 4

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 | Leo box office worldwide Day 5

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 6 | Leo box office worldwide Day 6

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 7 | Leo box office worldwide Day 7

லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 8 | Leo box office worldwide Day 8

Updated On: 19 Oct 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...