கொரோனா பாதிப்பு : ஐசியு-வில் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அனுமதி

பிரபல பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனா பாதிப்பு : ஐசியு-வில் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அனுமதி
X

லதா மங்கேஷ்கர்

பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கருக்கு, கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள ப்ரேச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுளார். அவரது உடல் நிலை கவலைகொள்ளும்படி இல்லையென்றாலும் வயது முதிர்வின் காரணமாகவே, ஐசியு-வில் அனுமதித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தற்போது 92 வயதாகும் லதா மங்கேஷ்கர், 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். தந்தை பண்டிட் தீனாந்த் மங்கேஷ்கர் மராத்தி இசைக்கலைஞர், அம்மா குஜராத்தி. இந்தியாவின் மற்றொரு இனிய பாடகி ஆஹா போஸ்லே, லதாவின் சகோதரி தான்.
ஹிந்தி மொழியில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷர், தமிழ் உள்பட பிற மொழிகளிலும் எண்ணற்ற இனிய பாடல்களை பாடி இருக்கிறார். 1988-ல், இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, 'சத்யா' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வளையோசை' பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.
மூன்று முறை தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது, பாரத் ரத்னா விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, இசை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
Updated On: 2022-01-11T19:48:34+05:30

Related News

Latest News

 1. அரியலூர்
  செந்துறையில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
 2. அரியலூர்
  செந்துறை அருகே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
 3. ஈரோடு
  பெருந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
 4. சிதம்பரம்
  சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் ஏற்றப்பட்டது தேசிய கொடி
 5. உதகமண்டலம்
  உதகையில் முன்னாள் ராணுவத்தினரின் குடியரசு தின விழா
 6. ஈரோடு
  அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
 8. கரூர்
  சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...
 9. ஈரோடு
  டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
 10. திண்டுக்கல்
  குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்