/* */

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு 'சலாம்' போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

.Lal Salaam Music composing-‘லால் சலாம்’ படத்துக்காக, ஏ.ஆர் ரகுமானின் இசையை கேட்ட படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவருக்கு ‘சலாம்’ போட்டு பாராட்டு தெரிவிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு சலாம் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
X

Lal Salaam Music composing- ‘லால் சலாம்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர் ரகுமான், அருகில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

.Lal Salaam Music composing, A.R.Rahman - Iswarya Rajini kanth Music, AR Rahman Composing Song with Aishwarya Rajini- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா. சினிமா ஆர்வம் மிக்க இவர், சினிமா இயக்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தன் கணவர் தனுஷ் உடன் இணைந்து, பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார். தனுஷை விட்டு பிரிந்தாலும், சினிமாத்துறையில், தொடர்ந்து தனது தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார்.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2012-ல் வெளியான '3' படம் மூலம், சினிமா இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதில் கதாநாயகனாக தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். ஆனால், இந்தப்படம் பெரிய அளவில் வெறறி பெறவில்லை. அதனை தொடர்ந்து, 'வை ராஜா வை' படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். இந்த படமும், ரசிகர்கள் பேசும் அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பிறகு, 'பயணி' என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.


இந்த படத்தில், ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார் என்று எதிர்பார்த்த நிலையில், கெஸ்ட் ரோலில், ஸ்பெஷல் அப்பியரன்ஸ் ஆக மட்டுமே வந்து செல்வார் என்பது, ரஜினி ரசிகர்களிடையே பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், ஏற்கனவே 'கோச்சடையான்' என்ற 'அனிமேஷன்' படத்தை, ரஜினியை ஹீரோவாக வைத்து படம் எடுத்து, ஐஸ்வர்யா தோல்வியை சந்தித்தார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. எனினும், சில நிமிடங்கள் வந்து சென்றாலும் ரஜினி ரசிகர்களுக்கு, அது ரஜினி படமாகவே தெரியும். எனவே, ரஜினி வரும் காட்சிகள் பரபரப்பான, விறுவிறுப்பானதாக இருக்கும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.


லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஈடுபட்டுள்ளார். இவரின் இசையை கேட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவருக்கு சலாம் செய்கிறார். இந்த வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Updated On: 26 Nov 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...