கோலாகலமாக நடைபெற்ற கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமணம்

K.L.Rahul-Athiya shetty wedding photos-இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் மும்பையில் உள்ள பண்னை வீட்டில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோலாகலமாக நடைபெற்ற கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமணம்
X

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமண புகைப்படம்.  

K.L.Rahul-Athiya shetty wedding photos-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.லோகேஷ் ராகுல். இவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோரான சுனில் செட்டியின் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வந்தன.


மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கே.எல். ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள் எனவும் மிக முக்கியமான பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட் கோலி மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் பங்கேற்க உளளதாக தகவல்கள் வெளியாகின.


அதேபோல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் தரப்பிலிருந்து சூப்பர் ஸ்டார் சல்மான் கான், ஜாக்கி ஷுரூஃப் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுனில் ஷெட்டி திருமணம் குறித்த அறிவிப்பை ரகசியாமாக வைத்திருந்ததாகவும் திருமணத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி திட்டமிட்டுள்ளதாகவும் மராட்டிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் எனும் மருதானி வைக்கும் நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடைபெற்றதாகவும் அதில் ஏ.ஆர்.ரகுமானின் "அரபிக் கடலோரம்" பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் இசைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 24 Jan 2023 8:45 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...